Aran Sei

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு – கீழமை நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

டகிழக்கு கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு கீழமை நீதிமன்றம் விதித்திருந்த ரூ. 25 ஆயிரம் தடைக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால் இந்த நிலையில் வழக்கு விசாரணை தொடர்பாக கீழமை நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவுகளுக்குத் தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி காவல்துறையின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமோனியம் பிரசாத், “உங்களை (டெல்லி காவல்துறை)  கேட்காமல் நாங்கள் கருத்துக்களை நீக்க முடியாது. ஆனால் அடுத்த விசாரனை வரை அபராத தொகையைச் செலுத்தாமல் இருக்கலாம்” என தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தின்போது துப்பாக்கியால் சுடப்பட்டதில் முகமது நசீர் என்பவருக்கு இடது கண்ணில் பார்வை பறிபோனது.

அசாம் – மிசோராம் எல்லையில் நடந்த மோதல் எதிரொலி : பேச்சுவார்த்தைக்கு வர இருமாநில டிஜிபிகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

இது தொடர்பாக அவர் பஜன்புரா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரை புகாரை ஏற்று காவல்துறையினர் தனியாக வழக்கு பதியாததை அடுத்து அவர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

நசீரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவரின் புகார் தொடர்பாக அடுத்த 24 மணிநேரத்தில் தனியாக வழக்கு பதியுமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

விவசாய பெண்களின் நாடாளுமன்றம் : எங்களின் உணவை ஏன் அம்பானிக்கும் அதானிக்கும் விற்கிறீர்களென ஒன்றிய அரசிற்கு கேள்வி

இதனை ஏற்று வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தனர்.

இதனை ஏற்க மறுத்த நசீர் டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ், “இந்த வழக்கில் காவல்துறையின் செயல்பாடுகல் சாதாரணமாகவும், இரக்கமற்ற மற்றும் கேலிக்குரிய முறையிலும் இருந்தது” என தெரிவித்தார்.

பாஜக ஆட்சியில் ஒருமுறை கூட நடைபெறாத தேசிய ஒருமைப்பாட்டு குழுக் கூட்டம் – பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறதா பாஜக?

இந்த வழக்கில் காவல்துறையின தங்கள் சட்டப்பூர்வ கடமைகளில் படுதோல்வியைடந்ததாக கூறிய நீதிபதி, குற்றம்சாட்டப்பவர்களை பாதுகாக்க காவல்துறையினர் முயல்வதாக குற்றம்சாட்டினார்.

நசீரின் புகாரை சரியாக கையாளாத பஜன்புரா காவல் நிலையத்தினருக்கு ரூ. 25 ஆயிரம் விதித்ததோடு, காவல்நிலையத்தில் பணியாற்றிய அதிகாரிகள்மீது துறை ரீதியான விசாரணைக்கும் நீதிபதி வினோத் யாதவ் உத்தரவிட்டார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்