Aran Sei

டெல்லி கலவரம் ஒரு திட்டமிடப்பட்ட சதி – டெல்லி உயர்நீதிமன்றம்

டந்த 2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. எந்தச் சம்பவத்தாலும் தூண்டப்படவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் பிணை மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, ” பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு நடந்த கலவரம் ஒரு சதித்திட்டம், திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஒரு சம்பவத்தாலும் தூண்டப்பட்டு நடைபெறவில்லை” என்று  தெரிவித்துள்ளது.

‘அகில இந்திய வானொலி நிலையங்களின் செயல்பாட்டை முடக்கும் பிரசார் பாரதி’ – தமுஎகச கண்டனம்

மேலும், போராட்டக்காரர்களின் நடத்தையிலிருந்து இந்தக் கலவரம் இயல்பு வாழ்க்கையையும் அரசின் செயல்பாடுகளையும் சீர்குலைக்க திட்டமிட்ட முயற்சி என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது என்று உயர்நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், “சிசிடிவி கேமராக்களின் துண்டிப்பு மற்றும் அழிப்பு,  சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முன் திட்டமிடப்பட்ட சதி இருப்பதை உறுதிப்படுத்துகிறது”. என்று தெரிவித்துள்ளார்.

‘பாரத் பந்தால் பயந்து போன பாஜக தலைவர்கள்’ – அகிலேஷ் யாதவ்

மேலும்,  எண்ணற்ற கலகக்காரர்கள் இரக்கமின்றி தடி, கிரிகெட் மட்டை போன்றவற்றை பயன்படுத்தியதே ஆதாரமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு பிணை கோரிய முஹம்மது இப்ராகிற்கு பிணை மறுத்த நிலையில், குற்றம்சாட்டபட்ட முகமது சலீம் கானுக்கு பிணை வழங்கி நீதிபதி  சுப்பிரமணியம் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்