Aran Sei

மசூதி எரிக்கப்பட்ட வழக்கில் காவல்துறையின் செயல்பாடுகள் வேதனையளிக்கின்றன – டெல்லி நீதிமன்றம் கருத்து

டகிழக்கு டெல்லி கலவரத்தின்போது மதீனா மசூதிக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக தனியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தததை கீழமை நீதிமன்றத்தில் தெரிவிக்காத ’காவல்துறையின் அலட்சியமான அணுகுமுறையைக் கண்டு வேதனை அடைகிறோம்’ என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இது விசாரணை அமைப்பு கடைபிடித்த ’இரக்கமற்ற அணுகுமுறையை’ பரதிபலிக்கிறது என நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை – ஒன்றிய அரசு: பிரதமரே உங்களின் மனசாட்சி எங்கே? – சித்தார்த்

டெல்லி காவல்துறை தாக்கல் மறுசீராய்வு மனுவை ஏற்றுக்கொண்ட கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ், ஆவணங்களை கூடுதல் முதன்மை பெருநகர் நீதிபதிக்கு (ஏசிஎம்எம்) அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளவும், உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், மசூதி தாக்கப்பட்டது தொடர்பாக தனியாக முதல் தகவல் அறிக்கையைப் பதியுமாறு ஏசிஎம்எம் கோரியிருந்தார்.

மேகாலயாவின் உரிமைகளுக்கு எதிராக இருக்கும் அசாமின் கால்நடை மசோதா – எதிர்த்து சட்டம் இயற்ற கோரும் மாநில காங்கிரஸ்

”ஏசிஎம்எம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, முதல் தகவல் அறிக்கை அவருக்குக் கிடைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இது தொடர்பாக காவல்துறையினரால் அவருக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது விசாரணை முகமையின் இரக்கமற்ற அணுகுமுறை/அலட்சியத்தை காட்டுகிறது. ஏனெனில் வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஏசிஎம்எம் முன்பு சமர்பிக்க காவல்துறையினர் கடமைப்பட்டுள்ளனர்.” என நீதிபதி வினோத் யாதவ் தெரிவித்தார்.

பெகசிஸ் தாக்குதல்  இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலின்றி நடந்தேறி இருக்க முடியாது – சிவ சேனா குற்றச்சாட்டு

மதினா மசூதி வழக்கில் தனியாக முதல் தகவல் அறிக்கை செய்யப்பட்டதை, கவனக்குறைவு காரணமாக அவர்களது முந்தைய அறிக்கையில் குறிப்பிடவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்