Aran Sei

டெல்லி கலவரத்தில் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு – ஆவணங்களை காவல்துறை சரியாக பராமரிக்கவில்லை என நீதிமன்றம் குற்றச்சாட்டு

டந்த ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லி கலவரத்தின்போது மதினா மஸ்ஜித் எரித்துச் சேத்தப்படுத்தபட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை டெல்லி காவல்துறை சரிவரப் பராமரிக்கவில்லை என டெல்லி நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ், “குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 172 (விசாரணை நாட்குறிப்பு) ன்படி வழக்கு நாட்குறிப்புகள் பராமரிக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலன் விசாரணை நடத்தும் ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும், அவர்களுக்குத் தகவல் கிடைத்த நேரம், விசாரணையைத் தொடங்கிய நேரம், ஆய்வு செய்த நேரம், சந்தித்த இடங்கள், பெறப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவை குறித்த தகவல்களைத் தினசரி நாட்குறிப்பில் பதிவு செய்ய வேண்டும்.

விவசாய சட்டங்களை நீக்க கோரி பாரத்பந்த் – முடங்கியது டெல்லி, ஹரியானா, பஞ்சாப்

மேலும், இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற கடைசி தேதிக்குப் பிறகே சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என நீதிபதி குறிப்பிட்டதாக தி வயர் கூறியுள்ளது.

காவல்துறை சார்பாக ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் நிதின் ராய் சர்மா, மசூதி தாக்குதல் தொடர்பாக உண்மையான புகார் மீதான வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு  ஒத்தி வைத்திருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்