Aran Sei

டெல்லி கலவர வழக்குகளை விசாரிப்பதில் மெத்தனம் – டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்

டந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பான பல வழக்குகளின் விசாரணையில், டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் மெத்தனத்துடன் செயல்பட்டதாக டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களை காப்பாற்றும் விதமாக காவல்துறையினர், பல முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைக்கும் நடைமுறையை மேற்கொண்டுள்ளனர் என, கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ் தெரிவித்துள்ளார்.

டெல்லி கவலவர வழக்கு தொடர்பாக, நிஷார் அகமது என்பவர் அளித்த புகார்கள் தொடர்பாக, தனியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரீசிலனை செய்யுமாறு, டெல்லி காவல்துறை தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி வினோத் யாதவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரம் தொடர்பான உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் வழக்கு

2020, பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நிஷார் அகமது காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீதான முதல் தகவல் அறிக்கையை, பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்திற்கான முதல் தகவல் அறிக்கையோடு காவல்துறையினர் இணைத்து இருந்தனர்.

”அரசு தாக்கல் செய்திருக்கும் இந்த மனுவில் எந்த பொருளும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. விசாரணை அமைப்பு, சட்டத்திற்கு எதிராக செயல்பட்டிருக்கிறது என்பது ஆதாரப்பூர்வமாக தெரியவருகிறது. கலவரம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளின் விசாரணையின் போது, டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் மெத்தனம் காட்டியிருக்கின்றனர்” என நீதிபதி வினோத் யாதவ் தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரத்தில் அமித்ஷாவின் தொடர்பு? – வழக்கறிஞரின் அலுவலகத்தில் மீண்டும் மீண்டும் போலீஸ் சோதனை

“எல்லாம் இன்னும் முடியவில்லை. மூத்த அதிகாரிகள் இப்போது இந்த விஷயத்தை கவனித்து, விவகாரத்தில் தேவையான தீர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்” எனவும்  நீதிபதி கூறியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்