Aran Sei

டெல்லி கலவரத்தில் கடைகளுக்கு தீவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு – ஆதாரமின்றி காவல்துறையால் புனையப்பட்டதாக டெல்லி நீதிமன்றம் கருத்து

டந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது கடைகளுக்கு தீவைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட 10 பேர்மீதான குற்றச்சாட்டுகளை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காவல்துறையினரின் தவறை மறைப்பதற்காக இருவேறு தினங்களில் நடைபெற்ற சம்பவங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 24 ஆம் தேதி தனது இரண்டு கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டதாக திவான் சிங் அளித்த புகார் மற்றும் பிப்ரவரி 25 ஆம் தேதி தனது கடைக்குத் தீ வைக்கப்பட்டதாக பிர்ஜ்பால் அளித்த புகார் என மொத்த மூன்று புகார்களின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

சென்னை உயிர்ச்சூழலின் கடைசி நம்பிக்கை – பள்ளிக்கரணை சதுப்புநிலமும் குடிநீர் பிரச்சினையும்

குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்த கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ், “புகார்தார்களில் முதல் கட்ட புகாரில், கலவரக்காரர்கள் தீ வைத்ததாகவோ அல்லது வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாகவோ ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை” என கூறியுள்ளார்.

புகார்தாரர் திவான் சிங் வழங்கியிருந்த இரண்டாவது அறிக்கையில் கடைகளுக்குத் தீ வைத்ததாக குறிப்பிட்டிருக்கும் நிலையில், அதனை ஏற்க மறுத்த நீதிபதி, புகார்தாரர்களிடம் இருந்து துணை அறிக்கைகளை பெற்று காவல்துறையினர் தங்கள் தவறுகளை மறைக்க முடியாது என தெரிவித்துள்ளது.

வாக்களித்த மக்களை ஏமாற்றும் மக்கள் பிரதிநிதிகள் – மோசடி வழக்கு தொடர உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு செயற்பாட்டாளர் கடிதம்

மேலும், சம்பவ தினத்தற்கு அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தீ வைத்ததாக குற்றம்சாட்டியிருப்பதை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இரண்டு தினங்களிலும் ஒரே கும்பல் தான் கலவரத்தில் ஈடுபட்டனர் என்பதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லாத நிலையில், பிப்ரவர் 24 மற்றும் 25 ஆம் தேதியில் நடைபெற்ற இரண்டு சம்பவங்களையும் காவல்துறையினர் ஒன்றாக இணைத்துள்ளனர் என்பது புரியவில்லை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் பட்டியல் சமூக சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு – விசாரணையில் வெளிவந்த உண்மைகள்

இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 147, 148, 149, 354, 392, 427, 452, 153-A மற்றும் 506ன் கீழ் பதியப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பிரத்யேக விசாரணை தேவைப்படுவதால், வழக்கைத் தலைமை பெருநகர நீதிபதிக்கு மாற்றி நீதிபதி வினோத் யாதவ் உத்தரவிட்டார்.

Source : PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்