Aran Sei

டெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்

டெல்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவ சங்கப் பிரதிநிதிகள் செயல்பாட்டாளர்கள் மூவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மாணவ சங்கப் பிரதிநிதிகள் தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோருக்கு நேற்றைய தினம் டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டிருந்து.

டெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் – பிணையில் விடுவித்த டெல்லி உயர்நீதிமன்றம்

மேலும், நேற்றை தினம் பிணை வழங்கிய நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் ஏ.ஜே. பம்பானி அடங்கிய அமர்வு, ”எதிர்ப்பை ஒடுக்குவதற்காக, போராட்டம் நடத்துவதற்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கும் உரிமைக்கும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இடையிலான கோடு மங்கலாக தெரிகிறது என்பதை வெளிப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த மனநிலை தொடர்ந்தால், அது ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்” என்றும் தெரிவித்திருந்தனர்.

சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – 3 வாரம் பிணை  வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

பிணை குறித்து தெரிவித்துள்ள சிறைத்துறை மூத்த அதிகாரி, உத்தரவைப் பெற்றதும் அவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என்று தெரிவித்திருந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.

மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை, சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு மாண்பமை நீதிமன்றம் பிணை வழங்கியது திருப்தி அளிக்கவில்லை. எனவே, நாங்கள் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்ய உள்ளோம்” என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தி குருப்பிடுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்