Aran Sei

டெல்லி கலவர வழக்கு: சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க கோரிக்கை விடுத்த காவல்துறை – மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால்

டந்த ஆண்டு டெல்லி கலவர வழக்கில் நீதிமன்றத்தில் வாதாட சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டுமென்ற மாநில காவல்துறையின் வேண்டுகோளை  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

மேலும், இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை படி, வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் மற்றும் ஜனவரி 26 அன்று நடந்த கலவரம் ஆகியவைத் தொடர்பாக சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்ற டெல்லி காவல்துறையின் கோரிக்கையை ஏற்று மாநில ஆளுநர் வழக்கறிஞரை   நியமிப்பது தொடர்பாக, அமைச்சரவை அந்தக் கோரிக்கை நிராகரித்துள்ளது  என்றும் அந்த   செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி ஆளுநர் உடனடியாக எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிணை உத்தரவைப் பெற பழங்காலம் போல் புறாக்களை நம்பியிருக்கிறதா சிறை நிர்வாகம்?’ – உச்சநீதிமன்றம் கேள்வி

ஏற்கனவே, 6 சிறப்பு வழக்கறிஞர்கள் கடந்த ஆண்டு நடந்த கலவரங்கள் தொடர்பாக 600 வழக்குகளில் ஆஜராகி வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடபட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்