Aran Sei

டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் குளறுபடி – குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமீன்

டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்களுக்கு, டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி, வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்முறையாக வெடித்தது. இதில்ஐம்பதற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அந்தக் கலவரத்தின் போது, ஜாஃப்ராபாத் பகுதியில் இருந்த பழக்கிடங்கையும் வீடுகளையும் (Fruits Godown) சூறையாடியதாகவும், தீயிட்டு கொளுத்தியதாகவும் ஷானு, ஜாரிஃப், ஆதிர், குல்ஃபாம் ஆகிய நபர்கள், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையி அடைக்கப்பட்டனர்.

டெல்லி கலவரம் – பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதைகள்

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்காக ஆஜராகிய வழக்கறிஞர் அப்துல் கஃப்பார், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்கள், தவறுதலாக கைது செய்யப்பட்டதாக கூறி ஜாமீன் அளிக்க கோரியிருந்தார். இவர்களுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என, அரசு தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கலவரம் – கொலை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் – டெல்லி நீதிமன்றம்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, இந்த வழக்கின் விசாரணை முறையாக நடக்கவில்லை எனவும், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையும் கவனக்குறைவான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியநீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஆதிர் மற்றும் குல்ஃபாமுக்கு ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார்.

டெல்லி கலவரம் – துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர்கள் – மறுபரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் ஷானு மற்றும் ஜாரிஃப், கலவர வழக்கில் தவறாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கும் ஜாமீன் வழங்க கோரியும் வழக்கறிஞர் அப்துல் கப்பார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த ஜாமீன் மனுக்களை எதிர்த்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞரான அனுஜ் ஹண்டா, டெல்லி கலவரத்தில் அவர்கள் வீடுகளை கொளுத்தியதாக கூறியுள்ளார்.

டெல்லி கலவரம் – காவல்துறையினர் சாட்சிகளை அழிக்க முயன்றதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் சிறப்பு நீதிபதி அமிதாப் ராவத், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் சிறையில் கழித்த காலத்தையும், அவர்களுடன் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை முன்னர் ஜாமீனில் விடுதலை செய்ததையும் கருத்தில் கொண்டு ஷானு மற்றும் ஜாரிஃபுக்கு ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி கலவரம் – சிறையில் தாக்கப்படும் முஸ்லீம் அரசியல் கைதிகள்

இதையடுத்து, பிணையில் வெளியாகவுள்ள இரு நபர்களும், நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல், டெல்லியை விட்டு எங்கும் செல்லக்கூடாது எனும் நிபந்தனையின் அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்