Aran Sei

அறுவடைக்கு பிறகு டெல்லி போராட்டத்திற்கு திரும்பும் விவசாயிகள் – கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடருமென அறிவிப்பு

ஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அறுவடை முடிவடைந்த நிலையில், அந்த மாநில  விவசாயிகள் மீண்டும் டெல்லி எல்லையில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு திரும்பி வருவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

வலுக்கும் எதிர்ப்பு: டெல்லி போராட்டத்தில் இணைந்த 400 கேரள விவசாயிகள்

இதுகுறித்து தெரிவித்துள்ள டெல்லி விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வரும் பாரதீய கிசான் சங்கம் மற்றும் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழு, எண்ணற்ற விவசாயிகளும் விவசாயக்கூலிகளும் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு திரும்பி வருவதாகத் தெரிவித்துள்ளதா அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மே 5 க்கு பிறகு விவசாய சங்க பிரதிநிதிகளையும், மே 10 க்கு பிறகு பெரும் திரளாக விவசாயிகளையும் விவசாயக்கூலிகளையும் டெல்லி நோக்கி அனுப்பவுள்ளதாக அந்தச் சங்ககங்கள் அறிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

டெல்லி போராட்டத்தில் பலியாகும் விவசாயிகள் : ’உணர்ச்சியற்று’ இருக்கும் அரசாங்கம்

டெல்லி விவசாயிகள் போராட்டம்குறித்து தெரிவித்துள்ள கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழுவின் பொதுச்செயலாளர் ஷர்வன் சிங், “எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும், சர்ச்சைக்குரிய மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரை  டெல்லி எல்லையில் போராடும் நாங்கள்  பஞ்சாப்பிற்கு செல்லமாட்டோம்” என்று கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்