Aran Sei

வேளாண் சட்டங்களை கைவிடாவிட்டால் எத்தனை ஆண்டுகளானாலும் போராட்டம் தொடரும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வேளாண் சட்டங்களைக் கைவிடாவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் டெல்லியின் எல்லையில் போராடுவோம் என பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாய்த்தின் சகோதரர் நரேந்திரா திகாய்த் அறிவித்துள்ளார்.

“மோடி அரசு, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறாவிட்டால்,  மீதம் இருக்கும் அவருடைய ஆட்சிகாலமான மூன்றரை ஆண்டும், விவசாயிகள் டெல்லியில் போராட தயாராக உள்ளோம் “என்று நரேந்திரா திகாய்த் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் பற்றிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாதம் – ஒரு சார்பானது என்று இந்தியா கண்டனம்

டெல்லி போராட்டம் குறித்து பேசிய நரேந்திர திகாய்த், கடந்த 35 ஆண்டுகளில் இது போன்ற மிகப் பெரிய போராட்டம் இந்தியாவில் நடக்கவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறிய போராட்டங்களைப் பார்த்த மத்திய அரசு டெல்லி விவசாயிகளின் போராட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

பணம் வாங்கிக் கொண்டு திகாய்த் குடும்பம் இந்தப் போராட்டத்தை நடத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த நரேந்திரா, “எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவர் பணம் வாங்கி இருப்பதாய் நிரூபித்தாலும் நாங்கள் போராட்டத்தை விட்டு வெளியேறுகிறோம் ” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்ட களத்தில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் – மேடையேறி உரை நிகழ்த்திய பெண் விவசாயிகள்

1986 ஆம் ஆண்டு மகேந்திர சிங் திகாய்த் தொடங்கிய இந்த சங்கத்தில், நரேந்திர திகாய்த் எந்த பொறுப்பிலும் இல்லாவிட்டாலும்,  அவரது இரண்டு அண்ணன்களான நரேஷ் மற்றும் ராகேஷ் திகாய்த் பாரதிய கிசான் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளனர். நூறு நாட்களுக்கு மேலாக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தை அவர்களே வழிநடத்துகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை உறுதிபடுத்தும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படக் கோரியும் ,டெல்லியின் சிங்கு, காசிப்பூர், திக்ரி ஆகிய எல்லைகளில் 100 நாட்களுக்கு மேலாக விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்