Aran Sei

டெல்லி போராட்டத்தில் பலியாகும் விவசாயிகள் : ’உணர்ச்சியற்று’ இருக்கும் அரசாங்கம்

credits : the hindu

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி விவசாயிகள் கடந்த 35 நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்க டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் “8 லட்சம் மக்கள் வீதிகளில் அழுது கொண்டிருக்கும்போது எங்களால் எவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபட முடியும்” என்று கேள்வியெழுப்பியுள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பேச்சு வார்த்தை முடிந்தபின்பே கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசு

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் குளிர் (1.1 டிகிரி செல்சியஸ்) டெல்லியை வாட்டிவதைக்கிறது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அந்த கடுங்குளிரில் சிக்கியுள்ளனர், இருந்தும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

டெல்லியின் கடுங்குளிரில் சிக்கியுள்ள விவசாயிகள் : கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசு

இந்நிலையில் டெல்லி காசிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி மரணமடைந்துள்ளார். இந்த போராட்டத்தில் ஈடுபட்டு மரணமடைந்த நபர் பாக்த்பாத் மாவட்டத்தைச் சேர்ந்த கல்தான் சிங் என்று பாரதிய கிசான் யூனியன் அடையாளம் கண்டுள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டத்தில் களமிறங்கும் ராஜஸ்தான் விவசாயிகள் – கிசான் சங்கம் அறிவிப்பு

”இந்த போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கல்தன் சிங் போராட்டக் களத்தில் இருந்தார். இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, ”என்று பி.கே.யுவின் தேசிய துணைத் தலைவர் ராஜ்பால் சிங் கூறியுள்ளார் என தி இந்து குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் – ஹரியானா தேர்தல்களில் விவசாயிகளின் கோபத்தை எதிர்கொள்ளும் பாஜக

அரசாங்கம் ’உணர்ச்சியற்று’ இருப்பதாக விமர்சித்துள்ளார் அவர் அரசு கெளரவம் பார்த்துக் கொண்டு சட்டத்தை ரத்து செய்யாமல் அரசு இருக்கிறது என்று கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்திக் இது வரை 40 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் என தி இந்து பதிவிட்டுள்ளது. மேலும் டெல்லியில் நிலவும் கடும் குளிரால் மரணமடைபவரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ராஜ்பால் சிங் கூறியுள்ளார்.

பீகார் மாநிலம் : ராஜ் பவனுக்கு அருகில் போராடிய விவசாயிகள் : தடியடி நடத்திய காவல்துறை

டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்திற்கு பாதுகாப்பாக நூற்றுக்கணக்கான காவலர்கள் சிங்கு, காசிப்பூர், திக்ரி எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்