Aran Sei

அசைவ உணவுக்கு தடைவிதித்து ஜேஎன்யு விடுதி மாணவர்களைத் தாக்கிய ஏபிவிபியினர் – காவல்துறை வழக்கு பதிவு

டெல்லி உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக இரண்டு மாணவர் குழுக்கிடையே நடந்த மோதல் ஏற்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) சார்பில் நேற்று (ஏப்ரல் 10) காவேரி விடுதியில் ராமநவமியைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூஜையைக் காரணம் காட்டி, வாரயிறுதியில் அமைக்கப்பட்ட உணவு பட்டியலின்படி அசைவ உணவுகளை சமைக்க ஏபிவிபி அனுமதிக்கவில்லை என்று இடதுசாரி மாணவர் குழு குற்றம் சாட்டியது.

இருதரப்பினருக்கிடையே நடந்த வாக்குவாதம் கல்வீச்சு சம்பவத்திற்கு வழிவகுத்தது.

ஜேஎன்யு விடுதியில் அசைவ உணவு வழங்குவதை தடுத்த ஏபிவிபியினர் – இருதரப்பு மோதல்; 15 பேர் காயம்

வன்முறை குறித்து பேசிய இடதுசாரி மாணவர் அமைப்பினர், “அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷித் உறுப்பினர்கள் உணவு விடுதியில் அசைவ உணவுகளை வழங்க விடாமல் தடுத்து வன்முறைத் தாக்குதலில் ஈடுப்படனர். இதில் சில மாணவர்கள் காமடைந்துள்ளனர். ஏபிவிபியினர் விடுதி செயலாரையும் தாக்கி உள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பல்கலைகழக  வளாகத்திற்கு காவல்துறையினர்  வரவழைக்கப்பட்டனர். இந்தக் கலவரத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இன்று (எப்ரல் 11) அதிகாலையில், ஜேஎன்யுஎஸ்யு, இந்திய மாணவர்கள் சங்கம் (எஸ்எஃஐ), டிஎஸ்ஃப் மற்றும் அகில இந்திய மாணவர் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், ஏபிவிபி மாணவர்கள் மீது புகார் அளித்துள்ளதாக காவல்துறை துணை ஆணையர் மனோஜ் சி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டதால் ஊரடங்கு உத்தரவிட்ட அரசு நிர்வாகம்

“அப்புகாரின் அடிப்படையில், பிரிவு 323, 341, 509, 506 மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். உண்மையான ஆதாரங்களை சேகரித்து குற்றவாளிகளை அடையாளம் காண தீவிர விசாரணை நடந்து வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்