Aran Sei

உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர் தாக்கப்படும் காணொளி: சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை ஸ்வாரா பாஸ்கர் மீது புகார்

த்தர பிரதேச இஸ்லாமிய முதியவர் மீது நடத்த தாக்குதல்குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவுகள் தொடர்பாக நடிகை ஸ்வாரா பாஸ்கர் மற்றும் ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி மற்றும் பலர் மீது டெல்லி காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.

அண்மையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் தொழுகைக்கு சென்ற முதியவர் ஒருவரைத் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

அந்தக் காணோளியில், ஜூன் 5 ஆம் தேதி, அப்துல் சமத் என்ற 72 வயது முதியவர், தொழுகைக்கு சென்றபோது அவரை தாக்கிய கும்பல், அவரது தாடியை மழித்ததும் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக காவல்நிலையித்தில் ஜூன் 7 ஆம் தேதி, சமத் அளித்த புகாரில்,  மதத்தின் காரணமாக தாக்கப்பட்டதாகவும், தாக்குதல்  நடத்தியவர்களால் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட நிர்பந்திக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

உத்திரபிரதேசத்தில் தொழுகைக்கு சென்ற முதியவரைத் தாக்கி தாடியை மழித்த கும்பல் – வழக்கு பதிந்து காவல்துறை விசாரணை

இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் பர்வேஷ் குஜ்ஜார், கல்லு குஜ்ஜார் மற்றும் ஆதில் என மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து, இந்தக் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்ததற்காக, ட்விட்டர் நிர்வாகம், காங்கிரஸ் கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள்மீது லோனி காவல்நிலையை துணை ஆய்வாளர் நரேஷ் ஷிங் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

அவர்கள்மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (கலகத்திற்கான அத்திரமூட்டுதல்), 153 (A) (பல்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை உருவாக்குதல்), 295 (A) (மத உணர்வுகளை சீற்றப்படுத்தும் நோக்குடன் செயல்படுதல்), 505 (குறும்பு), 120 (B) (கிரிமினல் சதி) மற்றும் 34 (பொதுவான நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டது.

ட்விட்டரில் காணொளியைப் பகிர்ந்ததற்கு காவல்துறை வழக்கு – ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படுவதாக பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா குற்றச்சாட்டு

இந்நிலையில், இன்று (ஜூன் 17), டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் ஸ்வாரா பாஸ்கர், மனிஷ் மகேஸ்வரி ஆகியோர் மீது தங்களது சமூக வலைதள பக்கங்களில் அக்காணொளி பகிர்ந்தது தொடர்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

இப்புகார் குறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், “ஸ்வாரா பாஸ்கர், ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி மற்றும் பலர் மீது திலக் மார்க் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இப்புகார்கள் விசாரணையில் உள்ளது. அதனால், இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் இப்போதைக்கு கூற முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்