Aran Sei

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வரம்புகளற்ற அனுமதி – காவல்துறைக்கு உத்தரவிட்ட டெல்லி துணைநிலை ஆளுநர்

க்டோபர் 18, 2021 வரை எவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யும் உரிமையை  டெல்லி காவல்துறைக்கு வழங்கி டெல்லி துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “1980 ஆம் இயற்றப்பட்ட தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் வழங்கி இருக்கும் அதிகாரத்தின் கீழ், ஜூலை 19 முதல் அக்டோபர் 18 ஆம் தேதிவரை யாரையும் கைது செய்து, சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை  டெல்லி காவல்துறை மேற்கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

ஒரு தனிநபர் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார் என காவல்துறையினர் கருதினால், அவரைக் கைது செய்து பல மாதங்களுக்குச் சிறையில் வைத்திருக்கவும் தேசிய பாதுகாப்பு சட்டம் அனுமதிக்கிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லியில் ஜந்தர் மந்தரில் ’கிசான் சன்சாத்’ (விவசாயிகள் நாடாளுமன்றம்) நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், ஆளுநரின் இந்த உத்தரவு வந்துள்ளது.

‘ஜெய்பீம்’: வரலாறும் பின்னணியும் – ஆதவன் தீட்சண்யா

இருப்பினனும், இது அடுத்த மாதம் வரவிருக்கும் சுதந்திர தினத்தையொட்டி வழங்கப்படும் வழக்கமான உத்தரவு தான் என டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக வழங்கப்படும் உத்தரவுகள் தலைநகர் டெல்லியில், ஜுலை 16 முதல் ஆகஸ்ட் 16 வரை அமலில் இருக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்