Aran Sei

’இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான செயலி’ – டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்க பெண்கள் ஆணையம் உத்தரவு

ஸ்லாமிய  பெண்களின் புகைப்படங்களை  ஏலம் விடும் வகையில் பதிவிட்டிருந்த செயலிகுறித்து  எடுக்கப்பட்ட நடவடிக்கை  தொடர்பாக  காவல்துறை விரிவான  அறிக்கை சமர்பிக்க  வேண்டுமென டெல்லி பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக  தி வயர்  செய்தி  வெளியிட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக   டெல்லி காவல்துறையின்  இணையவழி குற்றப்பிரிவு  வழக்குப் பதிந்துள்ளதாகவும்    அந்த செய்தி  கூறுகிறது.

நீட் தேர்வு குறித்து ஆராய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

கிட்ஹப் என்கிற செயலியில்  இஸ்லாமிய பெண்கள்  மற்றும் சிறுமிகளின்  படத்தைப் பதிவிட்டு  “சல்லி டீல்ஸ்”  என ஏலம்  விடும் வகையில்  பதிவிட்டிருந்ததாகவும்  தி வயர்  செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தி பிரிண்ட் செய்தி  நிறுவனத்தின்  பத்திரிக்கையாளர் பாத்திமா கான், “இதை  ஏற்றுக் கொள்ளவே முடியாது,இந்த  பட்டியலை  உருவாக்கியவர்கள்மீது  என்ன நடவடிக்கை  எடுக்க  போகிறீர்கள். இஸ்லாமிய ஆண்கள்  என்றால்  விசாரணையே  இன்றிக் கொல்லப்படுவதும், இஸ்லாமிய  பெண்கள்  என்றால்  அவமானப்படுத்தப்பட்டு  இணையத்தில்  விற்பனைக்கென்று பதிவிடப்படுவதும்  எப்போது  முடிவுக்கு வரும்?”  என்றும்  கூறியுள்ளதாக அந்த  செய்தி  தெரிவிக்கிறது.

‘போராட்டத்திற்கு வரும் மக்களை உ.பி. காவல்துறை தடுத்து நிறுத்துகிறது’ – ராகேஷ் திகாயத் குற்றச்சாட்டு

இதுகுறித்து  தெரிவித்துள்ள  இந்தியாவின் எடிட்டர்ஸ் கில்ட், “இந்த மோசமான  தாக்குதல் நடவடிக்கை. குறிப்பிட்ட சமுகத்தைப் பற்றி  தவறான கருத்தை விதைப்பதன் அறிகுறியாக உள்ளது. குறிப்பாக  இந்த அரசை விமர்சிக்கக் கூடிய இஸ்லாமிய  பெண்களுக்கு  எதிராக  இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது”  என்றும் தெரிவித்துள்ளதாக  தி வயர் செய்தியில்  கூறப்பட்டுள்ளது.   

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்