Aran Sei

விவசாயிகளின் போராட்டத்தினால் வியாபாரம் கடுமையாக பாதித்துள்ளது – டெல்லி எல்லையை திறக்க பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் வேண்டுகோள்

farmers

டெல்லி சிங்கு எல்லைப் பகுதியில் உள்ள ஒருபக்க சாலையைத் திறக்க அனுமதிக்க வேண்டுமென டெல்லி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் அம்மாநில ஆளுநர் மற்றும் காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

என்று தணியும் இந்த வேள்வித் தீ – விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உயிர் துறந்த ஆசிரியர்

சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகளின் போராட்டத்தினால் 5 மாதத்திற்கு மேலாக தங்கள் விற்பனை கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், அந்தச் சங்கத்தினர் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள டெல்லி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ராஜீவ் ஜெயின், ஒருபக்க சாலையைத் திறப்பதற்கு விவசாயிகள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

இந்தியாவிற்கு எதிரானவர்கள் டெல்லியில் போராடுகிறார்கள் – விவசாயிகளின் போராட்டத்தை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ்

மேலும், “விவசாயிகளின் போராட்டத்தினால் தங்கள் விற்பனை 5 மாதத்திற்கு மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வருமானமின்றி பல பெட்ரோல் நிலையங்கள் தற்போது மூடும்நிலையில் உள்ளது. இதனால் எண்ணற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ராஜீவ் ஜெயின் கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆதரவு – டிவிட்டரில் பெரும் ஆதரவு

டெல்லி சிங்கு எல்லைப்பகுதியில் ஒருபக்க சாலையைத் திறப்பதால் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்க இயலும் என்றும், டெல்லி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்