Aran Sei

நெடுஞ்சாலை ஆணையத்தின் கடன் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் – சாலை வரிகள் உயர்த்தப்படுமா?

டெல்லி- மும்பை தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்ததும் ஒன்றிய அரசுக்கு மாதம் 1,000 முதல் 1,500 கோடிவரை வருமானம் கிடைக்கும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும்,  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்பது வருமானம் ஈட்டித்தரும்  தங்கச் சுரங்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, நாட்டின் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கடந்த ஏழு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் வாயிலாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வருமானம் என்பது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.4 லட்சம் கோடியாக உயரும்  என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாங்கிய கடன் 2017  ஆம் ஆண்டு மார்ச் மாதம்  74,742 கோடியாக இருந்ததில்  இருந்து, தற்போது  இந்தாண்டின் மார்ச் மாதம்வரை 3,06,704 கோடியாக உயர்ந்துள்ளது  என்றும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி  மாநிலங்களவையில் குறிப்பிட்டுள்ளார்.  

சில தினங்களுக்கு முன்னர் தரமான சாலை வசதி வேண்டுமென்றால் சுங்கச் சாவடி  கட்டணம் செலுத்திதான் ஆக வேண்டும் என்று  கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

Source:NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்