Aran Sei

டெல்லியில் பட்டியல் சமூக சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு – விசாரணையில் வெளிவந்த உண்மைகள்

டெல்லியில்  ஒன்பது வயது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில்  குற்றம்சாட்டப்பட்ட  பூசாரி, இதற்கு முன்னரே அவரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் காவல்துறை தாக்கல் செய்தக் குற்றப்பத்திரிக்கையின் வழியாகத் தெரியவந்துள்ளது.

டெல்லி கண்டோன்ட்மண்ட் பகுதியை சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி, கடந்த ஆகஸ்ட் 1 அன்று  சுடுகாட்டிற்கு தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். மாலை ஆறு மணியளவில் அந்தச் சுடுகாட்டில் பூசாரியாகப் பணிபுரியும்   ராதே ஷ்யாம் அந்தச் சிறுமியின் தாயாரை அங்கு அழைத்துள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான்

இதனைத்தொடர்ந்து , சிறுமியின் தாயார் அங்குச் சென்று பார்த்தப்போது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தாகக் கூறிய அவர்,  காவல்துறையை அழைத்தால் அவர்கள் சிறுமியின் உடல் உறுப்புகளைத் திருடி விடுவார்கள் என்று  அச்சுறுத்திச் சிறுமியின் உடலைத் தகனம் செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில்  பூசாரி ராதே ஷ்யாம், மற்றும் சுடுகாட்டின்  ஊழியர்கள் சலீம், லக்‌ஷ்மி நாராயன் மற்றும் குல்தீப் சிங் என நான்கு பேர்  மீது  சிறுமியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், அந்தப்  பூசாரி முன்பே சிறுமியை மசாஜ் செய்யக் கூறியதாகவும் ஆபாசப்படம் பார்க்கச் செய்ததாகவும் தொட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துக் கோவில் இடிக்கப்பட்டு மசூதிக் கட்டப்பட்ட இடங்களில் மீண்டும் கோவில் கட்டப்படும் – உ.பி பாஜக சட்டமன்ற உறுப்பினர்

மேலும், சம்பவம் நடந்த அன்றும், பூசாரி அந்தச் சிறுமியை  மசாஜ் செய்யக் கூறியதாகவும் அதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அஹ்மதை ஜிலேபி வாங்க அனுப்பிய நிலையில், பூசாரி ராதே ஷ்யாமும்,  குல்தீப் சிங்கும் அந்த சிறுமியைப் பாலியல் வன்புணர்வு  செய்துள்ளனர் என்பது  குற்றப்பத்திரிக்கையின் வாயிலாக வெளிப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தச் சிறுமி உயிரிழந்த நிலையில் அதனை மறைக்கச் சிறுமி மின்சாரம் தாக்கி இறந்ததாக புனைந்துள்ளனர். அதை நியாயப்படுத்தும் வகையில்   அந்தச் சிறுமியின் உடல் மீது  தண்ணீரை ஊற்றியுள்ளனர்.

கோவிட்ஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரிக்காத இங்கிலாந்து அரசின் முடிவு – பாரபட்சமானது என ஒன்றிய அரசு குற்றச்சாட்டு

இதனைத்தொடர்ந்து அந்தச் சிறுமியின் தாயை அழைத்த பூசாரி,  சிறுமி மின்சாரம் தாக்கி இறந்ததாகக் கூறியதோடு, அவரை அச்சுறுத்தி உடலை எரித்துள்ளனர் என்பதும் குற்றப்பத்திரிகையின் வாயிலாக வெளிப்பட்டுள்ளது.

இதே போன்று, பெண்ணின் தாய் அளித்துள்ள வாக்குமூலத்தில், காவல்துறை  வந்து சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனை செய்தால் , சிறுமியின் உடல் உறுப்புகள் திருடப்பட்டு விடும் என்று அவர் அச்சம் கொள்ளும் வகையில் பூசாரி செயல்பட்டதாகவும்  அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது என்பதற்கு ஏ.கே.ராஜன் குழுவின் புள்ளிவிவரமே போதுமானது’ – கமல்ஹாசன்

மேலும், ஆபாசப்படம் பார்க்கப் பயன்படுத்திய தொலைபேசி மற்றும் படுக்கை விரிப்பு ஆகிய தடயங்களை அழிக்கும் வகையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எரித்துள்ளதாகவும் , அதன் தடயங்களைக் தடயவியல் துறையினர் கண்டறிந்ததாகவும்    காவல்துறை தாக்கல் செய்தக் குற்றப்பத்திரிக்கையின் வழியாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில்,இந்த வழக்கு  வரும் செப்டம்பர் 29 அன்று  விசாரிக்கப்படவுள்ளதாக பாட்டியாலா  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SOURCE:THE WIRE 

 

 

 

 

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்