Aran Sei

‘பட்டியல் சமூக சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை’ – குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஆஜர்படுத்த உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் ஒன்பது வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டபட்ட நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின சிறுமி – நீதி கோரும் திரைக்கலைஞர்கள்

மேலும், வரும் செப்டம்பர் 29 அன்று இந்த வழக்கு மீதான  அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் பாட்டியாலா நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி அஷ்டவுஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 1 அன்று  சுடுகாட்டிற்கு தண்ணீர் எடுக்கச் சென்ற தலித் சிறுமி   மாலை ஆறு மணியாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்,  அந்தச் சுடுகாட்டில் பூசாரியாகப் பணிபுரியும் ராதே ஷ்யாம் அந்தச் சிறுமியின் தாயாரை அங்கு அழைத்துள்ளார்.

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமியின் உடல் வலுக்கட்டயாமாக தகனம் – போராட்டத்திற்கு பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

இந்நிலையில், சிறுமியின் தாயார் அங்குச் சென்று பார்த்தப்போது சிறுமி உயிரிழந்திருந்தார். இதுகுறித்து   சிறுமியின் தாயிடம் தெரிவித்த ராதே ஷ்யாம்  சிறுமி மின்சாரம் தாக்கி உயரிழந்ததாக கூறியுள்ளார்.

காவல்துறையை அழைத்தால் அவர்கள் பிரேத பரிசோதனை செய்யச் சொல்லுவார்கள்; “இதன் வழியாகச் சிறுமியின் உடல் உறுப்புக்கள் திருடப்படும்”  “சிறுமியை இங்கேயே எரித்து, இந்தப் பிரச்னையை முடித்து விடலாம் என்று கூறினார். எனக்கு என்ன  செய்வதென்றே புரியவில்லை, கையறு நிலையில் இருந்தேன்”  என்றும்  சிறுமியின் தாய் கூறியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள  சிறுமியின் அண்டை வீட்டார்  தீக்க்ஷா, ”சிறுமியின் தாய் அவரது மகள்  மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாகக் கூறினார். அவளது உடல் எங்கேயெனக் கேட்டபோது பூசாரி எரித்துவிட்டதாகக் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் பூசாரியை வெளியே அழைத்தபோது, அவர் மற்றவர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார். இந்நிலையில், அங்குத் திரண்டிருந்தவர்கள் சிறுமியின் சடலத்தைச் சிதையிலிருந்து எடுக்க முயன்றபோது , அவளின் கால்கள் மட்டுமே எஞ்சி இருந்தது” என்றும் தீக்க்ஷா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அங்குத் திரண்டிருந்தவர்கள் இதுகுறித்து கோபத்தோடு பூசாரியிடம் கேள்வி எழுப்பிய நிலையில், பூசாரி குற்றத்தை ஒத்துக்கொண்டதாகச் சிறுமியின் அண்டை வீட்டாரான தீக்க்ஷா  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது  தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பூசாரி குல்தீப் சிங், லட்சுமி நாராயண், ராதே ஷ்யாம் மற்றும் சலீம் அஹ்மத்  ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் ஏற்கனவே நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

மேலும், இந்த வழக்கில் தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கையைக் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும்  காவல்துறை தெரிவித்துள்ளது.

Source: THE WIRE

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்