Aran Sei

‘ஊரடங்கு தீர்வல்ல; இனி கொரோனாவுடன் வாழ பழகுங்கள்’ – டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர்

கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் முகமூடி அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை நம் வாழ்க்கை முறையுடன் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று (மார்ச் 26) இரவு, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், “இனி ஊரடங்குக்கு நிச்சயம் வாய்ப்பில்லை. கடந்தாண்டு, கொரோனா தொற்று பரவியபோது ஊரடங்கு விதிக்கப்பட்டதற்கான காரணம் இருந்தது. பொதுவெளியில் நீங்கள் செய்யும் எல்லா  நடவடிக்கைகளையும் 21 நாட்களுக்கு நிறுத்தி வைத்தால் தொற்று பரவுவது நிறுத்தப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆகவேதான், அப்போது ஊரடங்கை அறிவித்தோம். ஆனால், உண்மையில் தொற்று பரவல் நிற்கவில்லை. இதன் வழியாக கொரோனாவுக்கு ஊரடங்கு தீர்வல்ல என்பது உறுதியாகியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

‘கடுமையாக உழைப்பதால் பாஜகவினருக்கு கொரோனா வராது’ – பாஜக எம்எல்ஏ

“இனி இது தொடர்ந்து நம்மிடையே இருந்து வரக்கூடிய நோய் என்பதால் இது உடனடியாக அழியாது என்று மருத்துவ நிபுணர்கள் எங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தனர். ஆகவே, நாம் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். எதிர்காலத்திலும் கொரோனா பரவல் தொடரும் என்பதால், தடுப்பு விதிமுறைகளுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். முகமூடி அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை நம் வாழ்க்கை முறையுடன் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்