Aran Sei

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூண் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பவுள்ளதாக பாரதிய விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் போராட்டத்தில் 320 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் – மக்கள் அதிகாரம் குழுவினர் தமிழில் பாடி ஆதரவு

இந்நிலையில், இவர்களது தியாகங்களை நினைவு கூறும் விதமாக காசிப்பூர்-காஜியாபாத் எல்லைப்பகுதியில் நினைவுத்தூண் எழுப்பவுள்ளதாக விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய் : டெல்லி விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மேலும், டெல்லியில் போராடும் விவசாயிகளின் ஊர்களிலிருந்து மண் எடுத்து வரப்பட்டு நினைவுத்தூண் எழுப்பப்டும் இடத்தில் வைக்கப்படும் எனவும், இதே போன்று சுதந்திர போராட்ட தியாகிகளின் ஊரில் இருந்தும் மண் எடுத்து வரப்பட்டு நினைவுத்தூண் எழுப்பட்டும் இடத்தில் வைக்கப்படும் என்றும் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவில் இன்று விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்தும், சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கரும் பங்கேற்று உள்ளனர்.

‘பெங்களூருவில் ஒரு டெல்லியை நிகழ்த்துங்கள்; நாற்திசையில் இருந்தும் முற்றுகையிடுங்கள்’ : விவசாயிகள் சங்கம் அழைப்பு

இந்தத் தூண்குறித்து தெரிவித்துள்ள விவசாயிகள் சங்கத்தின் ஊடக பொறுப்பாளர் தர்மேந்திரா, “இங்கு நிரந்தரமாக நினைவுத்தூண் எழுப்பப்படும் என்றும் கூறியுள்ளார்.

SOURCE: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்