Aran Sei

டெல்லி: பசுவை கொன்றதாக சந்தேகப்பட்டு தாக்கப்பட்டதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார்: 5 பேர் கைது

Credit: PTI

டெல்லியின் துவாரகா பகுதியில், பசுவைக் கொன்றதாகச் சந்தேகப்பட்டுத் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்

ராஜாராம் என்பவரின் பண்ணையைப் பசுக்காவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில், அந்தப் பண்ணையில் பணிபுரியும் 25 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார், மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

”ஒரு பண்ணையில் பசுவைக் கொன்று, அதன் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு நாங்கள் செல்வதற்கு முன்பாக, ஒரு கும்பல் அந்தப் பண்ணைக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியுள்ளது.” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பசு வதையைத் தடுக்காத காவல்துறையினர் – இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட காவல் கண்காணிப்பாளர்

தாக்குதலில் காயமடைந்த ராஜாராம் மற்றும் அவரது பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

”நாங்கள் அந்தப் பண்ணையிலிருந்து சில மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். இந்த விவகாரத்தில் இரண்டு தனித்தனி முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன. இது தொடர்பாகச் சம்பவ இடத்திலிருந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.” என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

உத்திரபிரதேசத்தில் பசுக் காவலர்களால் தாக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர் – பாதிக்கப்பட்டவர் மீது வழக்குப் பதிந்த காவல்துறை

பசுவதை தொடர்பாக ஒரு முதல் தகவல் அறிக்கையும், அந்தப் பண்ணையில் பசுவதை நடைபெற்றது என்ற கூற்றின் அடிப்படையில் ஒரு முதல் தகவல் அறிக்கையும் பதியப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source: PTI

தமிழ்நாட்டில் உயர்கிறதா மின்கட்டணம்? 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்