Aran Sei

புலம்பெயர் தொழிலாளர்களை அரசு பாதுகாக்க வேண்டும் – உழைக்கும் மக்கள் குழுமம் வேண்டுகோள்

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து கொள்கைரீதியாக அரசு முடிவு எடுக்க வேண்டும் என ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் உழைக்கும் மக்கள் குழுமம் (WORKING PEOPLES CHARTER ) வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று டெல்லி, ஜந்தர் மந்தரில் புலம்பெயர் தொழிலாளர்கள் , பாலியல் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் கொரோனா காலத்தில் அரசு கொடுத்த உறுதி மொழிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய தரவுகளை வெளியிடுக: உயர்நீதிமன்றம் உத்திரவு

உழைக்கும் மக்கள் குழுமம் ஒருங்கிணைத்த இந்தப் போராட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் , பாலியல் தொழிலாளர்கள் , அமைப்பு சாரா தொழிலாளர்கள், மீட்கப்பட்ட கொத்தடிமைகள் என பலதரப்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தின்போது பேசிய பாலியல் தொழிலாளர் குசம் ” பாலியல் தொழிலாளர்கள் கொரோனா காலத்தில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள் ” என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

‘கொரோனா ஊரடங்கின் போது, மகாராஷ்ட்ராவில் 17 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு’ – மத்திய அரசு

மேலும், புலம்பெயர் தொழிலாளர்களிடம் தக்க ஆவணங்கள் இல்லாததால் அரசின் உதவிகளைப் பெற முடியவில்லை என்றும், அமைப்பு சாரா தொழிலார்களுக்கு அரசு 10,000 நிதி வழங்கவேண்டும் எனவும்  குசம் தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தின் முடிவில் , “புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அரசு கொள்கைமுடிவு எடுக்க வேண்டும், பாலியல் தொழிலாளர்களை அங்கீகரிக்க வேண்டும், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு விடுதி கட்டித்தர வேண்டும் ” என்ற கோரிக்கைகளை முன் வைத்து மனுவொன்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’புலம்பெயர் தொழிலாளர்களின் கணக்கெடுப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கும்’ – மத்திய அரசு அறிவிப்பு

தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மனுவானது தொழிலாளர் நலத்துறை அமைச்சர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடம் அளிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்