Aran Sei

மருத்துவமனையில் செவிலியர்கள் மலையாளத்தில் பேச விதிக்கப்பட்டிருந்த தடை – எதிர்ப்பை தொடர்ந்து உத்தரவைத் திரும்பப் பெற்ற நிர்வாகம்.

டெல்லியில் உள்ள ஜிப்மெர் அரசு மருத்துமனையில் செவியிலர்கள் மலையாளத்தில் பேச விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவைத் திரும்பப் பெற்றிருப்பதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

“இந்த உத்தரவு எங்கள் கவனத்திற்கு கொண்டு வராமல் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அது திரும்பப் பெறப்பட்டுள்ளது” என  மருத்துவமனையின் இயக்குநர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். மருத்துவமனை இன்னும் புதிய உத்தரவைப் பகிரவில்லை.

குடி உரிமை திருத்தச் சட்ட (CAA) அமலாக்கத்தை மீண்டும் தீவிரமாக்குகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்

”ஜிப்மரில் பணிபுரியும் செவிலியர்கள், பணியிடங்களில் தகவல் தொடர்பிற்கு மலையாள மொழியைப் பயன்படுத்துவது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது. மலையாள மொழி தெரியாத நோயாளிகள் மற்றும் சக ஊழியரகளுக்கு இது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக உணர்கிறோம். எனவே அனைத்து செவிலியர்களும் இந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே தகவல் தொடர்புக்கு பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என டெல்லியில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஓர் ஆண்டு நிறைவு – காசியாபாத் ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்ட நகலை எரித்த விவசாயிகள்

இந்த முடிவை விமர்சித்திருந்த  அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள், அவர்கள் எப்போதும் நோயாளிகளுடன் இந்தியில் மட்டுமே பேசிவருதாக கூறியிருந்தனர்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்