Aran Sei

‘மக்களுக்கு படுக்கை வசதி இல்லை; நீதிபதிகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் படுக்கையா?’ – டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

கொரோனா சிகிச்சை பெற ஐந்து நட்சத்திர ஹோட்டலை நாங்கள் ஒருபோதும் கேட்கவில்லை என்றும் நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக பிரத்தியேகமாக அசோகா ஹோட்டலில் நூறு அறைகள்  ஒதுக்கப்பட்டதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் டெல்லி அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“நாங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 100 படுக்கைகளை  எப்போது ஒதுக்க சொல்லி கேட்டோம்? நீதித்துறையை சேர்ந்த அதிகாரியோ அல்லது நீதிபதியோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு மருத்துவமனையில் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கூறியிருந்தோம். காரணம், நாங்கள் ஏற்கனவே இரண்டு நீதித்துறை அதிகாரிகளை இழந்துவிட்டோம்.” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை பரவல்: மோடி தான் முக்கிய குற்றவாளி – சர்வதேச ஊடகங்கள் குற்றச்சாட்டு

இதற்குப் பதிலளித்த டெல்லி அரசு, “எங்களின் இந்த ஏற்பாட்டில் எந்த தவறும் இல்லை. ஊடகங்களே இந்த விஷயத்தை சர்ச்சைக்கு உள்ளாக்கியது. டெல்லி நகரில் உள்ள பல ஹோட்டல்கள் கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டு மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.” என்று கூறியுள்ளது.

ஆனால், இவ்விளக்கத்தை ஏற்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மேலும், “ஒருபுறம், கொரோனா சிகிச்சை பெற மக்களுக்கு மருத்துவமனைகள் கிடைக்கவில்லை.  ஆனால், நாங்கள் உங்களிடம் ஆடம்பர ஹோட்டல்களில் கொரோனா வார்டு கேட்கிறோம். இதுபோன்ற வசதியை நாங்கள் கேட்போம் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?” என்று டெல்லி அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊடகங்களின் மீது தவறில்லை என்றும் உங்கள் உத்தரவுதான் தவறானது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்