சென்ட்ரல் விஸ்டா(புதிய நாடாளுமன்ற வளாகம்) திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறி கொரோனா காலத்தில் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மொழிபெயர்ப்பாளர் அன்யா மல்ஹோத்ரா மற்றும் ஆவணப்பட இயக்குனர் சொஹைல் ஹாஷ்மி இணைந்து இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனுவில், கொரோனா தொற்று பரவிவரும் சூழலில் இந்த திட்டம் முக்கியமானதில்லை எனவே கட்டுமானப் பணிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்திருந்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் விஸ்டா திட்டம் ஒரு கிரிமினல் விரயம் – ஒன்றிய அரசை விமர்சித்த ராகுல் காந்தி
இந்நிலையில், இன்றைய தினம் தீர்ப்பை வாசித்த நீதிபதி டி.என்.படேல் மற்றும் ஜோதி சிங் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், மனுதாரர்களுக்கு 1லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்தே தொழிலாளர்கள் அந்தப்பகுதியிலேயே வசித்து வருகிறார்கள். எனவே, திட்டத்திற்கு தடைவிதிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று கூறியுள்ளதாகவும், மேலும், தொழிலாளர்கள் அந்தப்பகுதியில் வசிப்பதால் தடைவிதிக்க வேண்டிய அவசியமில்லை என்று டி.டி.எம்.எ கடந்த ஏப்ரல் 19 வெளியிட்டுள்ள உத்தரவை மேற்கோள்காட்டியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: உளவியல் சிக்கலால் அவதியுறும் குழந்தைகள்
அதுமட்டுமல்லாது, மொத்த சென்ட்ரல் விஸ்டா திட்டமும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இந்த வளாகத்தில் நாடாளுமன்ற பணிகள் நடைபெறவுள்ளதாலும் மக்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளார்கள் என்றும் உயர்நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.