Aran Sei

தடுப்பு மருந்துகள் மக்களின் நலனுக்காக கொள்முதல் செய்யப்பட்டதே தவிர,அரசியல் லாபத்திற்காக அல்ல – அரசியல்வாதிகளை எச்சரித்த உயர்நீதிமன்றம்

Image Credits: India TV News

கொரோனா மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவும் சூழலில் மருந்துகளைப் பதுக்க, எந்த  அரசியல் தலைவர்களுக்கும்  அதிகாரமில்லை என்று இன்றையதினம் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அரசியல் கட்சியின் தலைவர்கள் பதுக்கி வைத்துள்ள கொரனோ மருந்துகளை ஒப்படைக்க வேண்டுமெனவும் அந்த உத்தரவில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

கொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும்,  மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்

அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் அதிகளவில் கொரோனா மருந்துகளைப் கொள்முதல் செய்து  பதுக்கி வைத்து, விநியோகிப்பது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமெனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலமனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தமனுவின் மீதான விசாரணையின்போது, டெல்லி காவல்துறை தாக்கல் செய்த அறிக்கை போதிய அளவில் ஆய்வு செய்யப்படாத அளவில் உள்ளது எனவும்  திருப்திகரமாக இல்லை எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்

இந்த மனுவின் விசாரித்த நீதிபதி விபின் சங்கீ மற்றும் ஜஸ்மீத் அடங்கிய அமர்வு, “இந்த மருந்துகள் பொதுமக்களின் நலனுக்காக கொள்முதல் செய்யப்பட்டதே தவிர,அரசியல் லாபத்திற்காக அல்ல எனவே அரசியல்வாதிகள் தங்கள் கையிருப்பில் உள்ள மருந்துகளை சுகாதரத்துறை ஆணையரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்