Aran Sei

’கடன் வாங்கியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜனை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு’ – மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

பிச்சை எடுத்தோ, கடன் வாங்கியோ, திருடியோ, காசு கொடுத்து வாங்கியோ” டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனையில் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கப் போதிய ஆக்சிஜன் இல்லாததால் ஆபத்து ஏற்படும் என்பதால் ஆக்சிஜனை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

”நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து தர வேண்டியது அரசின் அடிப்படை கடமை. அதனை மத்திய அரசு சரிவர செய்ய வேண்டும். ஆக்சிஜனை தட்டுப்பாடை போக்குவதற்கு திருடியோ, கடன் வாங்கியோ, பிச்சை எடுத்தோ அல்லது பணம் செலுத்தி வாங்கியோ ஆக்சிஜனை ஏற்பாடு செய்யுங்கள்” என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘கொரோனா தடுப்பூசி தொற்றை தடுக்காது; ஆனால், உங்கள் உயிரை காக்கும் ’ – டெல்லி எய்ம்ஸ் இயக்குனர்

வழக்கின் விசாரணையை ஒருநாள் ஒத்திவைக்க வேண்டும் மத்திய அரசின் வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இன்று இரவு ஆக்சிஜன் இல்லாமல் நோயாளி உயிரிழந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

”மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் தொழிற்சாலைகள் குறித்து கவலைப்படுகிறீர்கள். டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் இருக்கக்கூடிய சூழல் மிகவும் அபாயகரமானது. நாங்கள் வெறும் டெல்லியை குறித்து மட்டும் பேசவில்லை ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்க்க வேண்டியது அரசின் பொறுப்பு. இதற்காக தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன்களை உடனடியாக மருத்துவ சேவைகளுக்கு திருப்பி விடுங்கள்” என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்