Aran Sei

டெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் – பிணையில் விடுவித்த டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி கலவரத்திற்கு தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டிருந்த மாணவர் அமைப்பைச் சேர்ந்த  தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால், தன்ஹா ஆகியோருக்கும் பிணை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்திற்கு சதி செய்த குற்றச்சாட்டின் பெயரில் மாணவர் அமைப்புகளை சேர்ந்த தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

உத்திரபிரதேசத்தில் தொழுகைக்கு சென்ற முதியவரைத் தாக்கி தாடியை மழித்த கும்பல் – வழக்கு பதிந்து காவல்துறை விசாரணை

பிணை வழங்கிய நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் ஏ.ஜே. பம்பானி அடங்கிய அமர்வு, ”எதிர்ப்பை ஒடுக்குவதற்காக, போராட்டம் நடத்துவதற்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கும் உரிமைக்கும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இடையிலான கோடு மங்கலாக தெரிகிறது என்பதை வெளிப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த மனநிலை தொடர்ந்தால், அது ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்” என தெரிவித்தது.

உத்தரவின் நகலைச் சம்பந்தப்பட்டவர்களின் வழக்கறிஞர்களுக்கு விரைந்து வழங்க வேண்டும் என கூறியுள்ள நீதிபதிகள், “குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று பேருக்கும், தலா இரண்டு உள்ளுர் நபர்கள் ஜாமீன் மற்றும் ரூ. 50 ஆயிரத்திற்கான தனிநபர் பத்திரங்களை சமர்பித்தல் போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளனர்.

‘ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கிய ஊழலில் பாஜகவினருக்கும் தொடர்புள்ளது’ – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தேவங்கனா நான்கு வழக்குகளிலும், நடாஷா மூன்று வழக்குகளில் விசாரணையை எதிர்கொண்டு இருக்கும் நிலையில், இருவரும் அனைத்து வழக்குகளிலும் பிணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என அவர்களது வழக்கறிஞர் அதித் பூஜாரி கூறியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் செல்போன் எண்களை உள்ளூர் காவல்நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் சிறை பதிவேட்டில் தெரிவித்திருக்கும் முகவரியிலேயே வசிக்க வேண்டும் அல்லது அவர்கள் வசிப்பிடம் மாற்றப்பட்டால் அதனையும் காவல்நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

‘55 வயதிற்கு மேற்பட்டவர்களையும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் இணைத்து, பசியால் ஏற்படும் மரணத்தை தவிருங்கள்’ –வைகோ கோரிக்கை

மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் எந்தவொரு அரசு தரப்பு சாட்சியங்களுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது ஆதரங்களை சிதைக்கவோ முயற்சிக்க கூடாது. அதே போன்று பிணையில் இருக்கும் காலத்தில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்