Aran Sei

‘ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறப்பில்லையா?’ ஒன்றிய அரசு பொய் சொல்வதாக டெல்லி அரசு கண்டனம்

credits : op india

விரைவில் கொரோனா பெருந்தொற்று என்ற ஒன்றே இல்லை என ஒன்றிய அரசு கூறும் என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூலை 20), மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளித்த ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார், “கொரோனா இரண்டாவது அலையில் நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையிலிருந்து தெரியவருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் சப்ளையைச் சீராக ஒன்றிய அரசு பிரித்து வழங்கியது. சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் வருவது, மாநில அரசுகளுக்கு உட்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நடக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடரும் மக்கள் வாழ்நிலையும் – சோசலிச தொழிலாளர் மையம் அறிக்கை

இணை அமைச்சரின் கருத்தை, டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஜூலை 21), செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “விரைவில் கொரோனா பெருந்தொற்று என்ற ஒன்றே இல்லை என ஒன்றிய அரசு கூறும். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றால், மருத்துவமனைகள் ஏன் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக கூறி உயர் நீதிமன்றத்திற்கு சென்றன? இது முற்றிலும் தவறானது.” என்று கண்டித்துள்ளார்.

source; indianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்