Aran Sei

வன்கொடுமை வழக்கை தவறாக பயன்படுத்தினால் கடும்தண்டனை விதிக்கப்படும் – நீதிமன்றம் எச்சரிக்கை

போலியான காரணங்களுக்காகப் பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டப்பிரிவுகளில் புகார் அளித்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு எச்சரித்துள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

இருவருக்குள் ஏற்பட்ட பார்க்கிங் பிரச்சனை தொடர்பான வழக்கில் இருவரும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவுகளில் புகார் அளித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட இரண்டு முதல் தகவல் அறிக்கைகளிலும் ஒரு மனுதாரர் மற்றொரு மனுதாரரை பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் போலியாகக் குற்றம் சாட்டியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப்பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை

மேலும், அந்த இரண்டு முதல் தகவல் அறிக்கைகளிலும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354, 354எ ,354பி, 354சி, 354டி ஆகிய பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டபிரிவுகளின் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் லைவ் லா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணையின்போது டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு , சொந்த உறவுகள், நண்பர்களுக்குள் பிரச்சனை என்றால் சுமூகமாகப் பேசித் தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

பாலியல் வன்கொடுமை புகார் கூறியவரை திருமணம் செய்யக் கூறிய விவகாரம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகக் கோரிக்கை

மேலும் மனுமீதான விசாரணையின்போது பேசியுள்ள நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் , சாதாரண பார்க்கிங் பிரச்சனைக்காகப் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருப்பது பெண்களின் மரியாதைக்கு இழுக்கானது என்று கூறியுள்ளதாகவும் லைவ் லா செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் காவல்துறையின் செயல்பாடுகுறித்து கூறிய அந்த அமர்வு , “காவல்துறை இது போன்ற அற்பமான வழக்குகளை விசாரிப்பதால் , மிகமுக்கிய வழக்குகளில் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் – குற்றவாளியையே திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் நீதிமுறை

இந்த வழக்கின் மனுதாரர்களை டெல்லி உயர்நீதி மன்றம் கண்டித்ததோடு 30,000 ரூபாய் அபராதம் விதித்ததுள்ளதாகவும் லைவ் லா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்