Aran Sei

அயோத்தி குறித்து எழுதப்பட்ட சல்மான் குர்ஷித்தின் நூலை தடைவிதிக்க மனு – தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் ‘அயோத்தியில் சூரிய உதயம்: நம் காலத்தின் தேசம்’ புத்தகத்தை வெளியீடுவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடைக் கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், மக்கள் மிகவும் உணர்ச்சிக் கொண்டவர்களாக இருந்தால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அப்புத்தகம் இந்துத்துவாவை ஐஎஸ்ஐஎஸ் மற்றும் போகோ ஹராம் போன்ற தீவிரவாத குழுக்களுடன் ஒப்பிடுவதால், மற்றவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக கூறி வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் தாக்கல் செய்த மனுவை, இன்று(நவம்பர் 25), உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

‘கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது?’- ஜோதிமணி எம்.பி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ளிருப்பு போராட்டம்

மனுவை விசாரித்துள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா, “புத்தகத்தை வாங்கவோ, படிக்கவோ வேண்டாம் என்று மக்களிடம் சொல்லுங்கள். இது மோசமாக எழுதப்பட்டுள்ள புத்தகம், இதைவிட சிறப்பான ஏதாவது ஒன்றை படியுங்கள் என மக்களிடம் சொல்லுங்கள். புத்தகத்தை தடை விதிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

அப்புத்தகம் பொது அமைதியை சீர்குலைக்கக்கூடும் என்றும் அமைதியைப் பேணுவது அனைவரின் கடமை என்றும் மனுதாரரின் வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.

மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்களால இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா, அம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

‘கல்விச் சான்றிதழ்கள் மீதான ஜிஎஸ்டி வரி வசூல் அறிவிப்பைத் தடுக்க வேண்டும்’- முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

நவம்பர் 17 அன்று, விசாரணை நீதிமன்றத்தில், இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா தாக்கல் செய்த மனுவில், சமூகத்தின் ஒரு பெரும்பான்மை பிரிவினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, அப்புத்தகத்தின் வெளியீடு மற்றும் விற்பனைக்கு தடைக் கோரி இருந்தார். ஆனால், அப்புத்தகத்திற்கு தடைவிதிக்க கூடுதல் சிவில் நீதிபதி மறுத்துவிட்டார்.

புத்தகத்தை எழுதுவதற்கும் வெளியிடுவதற்கும் ஆசிரியருக்கும் வெளியீட்டாளருக்கும் உரிமை உண்டு என்று விசாரணை நீதிமன்றம் கூறியது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்