புதிய தகவல் தொழிற்நுட்ப சட்டத்தின் கீழ் மின்னணு செய்தி ஊடகங்கள் கட்டுப்பட வேண்டுமென்ற ஒன்றிய அரசின் உத்தரவுக்குத் தடைவிதிக்க முடியாதென டெல்லி உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய தகவல் தொழிற்நுட்ப சட்டத்திற்கு எதிராக குயின்ட் மின்னணு ஊடக இயக்குனர் ரிது கபூர், தி வயர் செய்தி நிறுவனம், ப்ரவ்தா செய்தி அமைப்பு ஆகியவை இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பன்னாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் நிலை – ஆர்.டி .ஐ தகவல்
இதுகுறித்து தெரிவித்துள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளான சி.ஹரிசங்கர் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, “அரசால் வெளியிடப்பட்டுள்ள உத்தரவு விதியை நடைமுறைப் படுத்துவதற்கான அறிவிப்பு மட்டுமே, நீங்கள் உங்கள் மனுவில் புதிய தகவல் தொழிற்நுட்ப சட்ட விதிக்கு மாறாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடவில்லை. எனவே, விதிகளுக்கு எதிராகத் தடைவிதிக்க இயலாது” என்று உத்தரவிட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவில், புதிய தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரமானது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் 19(1)(a) ஆகிய பிரிவுகளை மீறுவதாகவும் கூறப்பட்டிருந்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விதியினால் மின்னணு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் நீக்குதல், மாற்றியமைத்தல் அல்லது தடுப்பது, தணிக்கை செய்தல், கட்டாய மன்னிப்பு கோருதல் போன்ற கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்ததாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.