கொரோனா தடுப்பூசி மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
தற்போது மருத்துவ உதவி அதிகம் தேவைப்படும் நபர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி படம் : அறிக்கையளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
இன்று விசாரணைக்கு வந்த பொதுநல மனுமீதானபோது தலைமை நீதிபதி தி.என்.படேல் , இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையும் ,கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு ஆய்வாளர்கள் துறையும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த மனுவின் அடுத்த விசாரணை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.
’கொரோனா தடுப்பூசி நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ – அமித் ஷா
மேலும் இந்த மனுவில் வீடுகள் அற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி வழங்க அரசு குறிப்பிட்டுள்ள அதிகம் பாதிப்படைந்தவர்கள் என்பதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதையும் இந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
SOURCE: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.