Aran Sei

அலோபதி குறித்து தவறான கருத்திட்டதாக மருத்துவர்கள் புகார் – பாபா ராம்தேவ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பாபா ராம்தேவ் வரும் ஜூலை 13 வரை எந்தவிதமான ஆத்திரமூட்டும் கருத்துகளையும் தெரிவிக்ககூடாதென டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘தவறான தகவல்களைக் கூறி மக்களைக் குழப்புகிறார் பாபா ராம்தேவ்’ – இந்திய மருத்துவ சங்கத்தினர் காவல்நிலையத்தில் புகார்

பதஞ்சலி நிறுவனம் கோரோனில் மருந்து கொரோனாவைக் குணப்படுத்தும் என்று போலியாகவும் தவறாகவும் கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற டெல்லி  மருத்துவ சங்கத்தின் வேண்டுகோளுக்கு பின்னர் உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வரும் ஜூலை 13 அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் வரை எவ்விதமான கருத்துக்களும் தெரிவிக்க கூடாது என்றும், இதுகுறித்து பதிலளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.

அலோபதியை விமர்சித்த பாபா ராம்தேவ்: நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தை அறிவித்த பயிற்சி மருத்துவர்கள்

அல்லோபதி மருத்துவம் குறித்தும், மருத்துவர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் சில நாட்களுக்கு முன்னர் பாபாராம்தேவ் தெரிவித்த கருத்துக்கு டெல்லி மருத்துவ சங்கம் கடும்எதிர்ப்பை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்