Aran Sei

பெற்றோர்களால் வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரினச் சேர்க்கையாளர்: பாதுகாப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்

credits : the wire

குடும்ப உறுப்பினர்களால் அச்சுறுத்தலைச் சந்தித்த டெல்லியைச் சேர்ந்த 23 வயது ஓரினச் சேர்க்கையாளர் பெண்ணுக்கு (Lesbian) டெல்லி உயர் நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில், ஒரு பெண் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு,  தான் ஒரினச் சேர்க்கையாளர் எனத் தெரிந்தும் தன்னுடைய பெற்றோர்கள் வற்புறுத்தி ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்ததாகவும், தான் கல்யாணம் முடிந்த உடனேயே தான் ஒரினச்சேர்க்கையாளர் எனத் தன்னுடைய கணவனிடம் தெரிவித்ததாகவும் மனுவில் கூறியுள்ளார்.

மேலும், இந்தத் திருமணத்தை முடித்துக் கொள்ளலாம் என கூறி, தான்  விவகாரத்து கோரியும், தன்னுடைய கணவர், இதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மாற்றுப்பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்ததானம் செய்யத் தடைவிதிக்கக்கூடாது – உச்சநீதி மன்றத்தில் மனு

இதையடுத்து கடந்த மார்ச் 7 ஆம் தேதி (2021),  தன்னுடைய தாயார் தன்னுடைய பாலின ஈர்ப்பை சரி செய்வதற்காக, மதகுருவிடமும் அழைத்துச் சென்று பல்வேறு சிகிச்சைகளை வழங்கியதாகவும், அந்தப் பெண் மனுவில் கூறியுள்ளார்.

ரூத் ஜின்ஸ்பர்க் : அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் பெண்ணுரிமை போராளி

இந்தப் பிரச்சனையால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்த அந்தப் பெண், தன்னுடைய உயிருக்கு அஞ்சியும், தன்னுடைய  குடும்பத்தினர் செய்யும் மனிதாபிமானமற்ற சடங்குகளிலிருந்து விடுபடவும், தன்னை திருமணம் செய்து கொடுத்த வீட்டிலிருந்து வெளியேறியதாக மனுவில் கூறியுள்ளார்.

ஃபாசிஸ்ட் கட்சிக்குத் தடை – கிரீஸ் மக்கள் கொண்டாட்டம்

இந்நிலையில், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடிய அவர், தன்னுடைய பெற்றோரிடமிருந்தும், திருமணம் செய்தவரின் குடும்ப உறுப்பினர்களிடமும் இருந்து பாதுகாப்பு கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முக்தா குப்தார, அந்தப் பெண் அவர் விரும்பும் இடத்தில் சென்று தங்கி கொள்ளுவதற்கான சுதந்திரம் உள்ளது என்றும், அந்தப் புதிய இடத்தில், அப்பெண்ணுக்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்