டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஹிந்து ரக்ஷா தள் தலைவர் பின்கி சவுத்திரியை கைது செய்வதற்கு தடைவிதிக்க முடியாதென டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜரான சவுத்திரியின் வழக்கறிஞர், குற்றம்சாட்டப்பட்ட நபர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால், முழக்கம் ஏதும் எழுப்பவில்லை. இந்த வழக்கில் முழக்கம் எழுப்பப்பட்டதன் அடிப்படையில் தான் முதல் தகவல் அறிக்கைப் பதியப்பட்டுள்ளது. எனவே, பிணை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில்,இந்த மனுவை விசாரித்த நீதிபதி குப்தா, “முதல் தகவல் அறிக்கை என்பது முதல்நிலை ஆவணம் தான், எனவே மேற்கொண்டு விசாரணை தேவை” என்றும் கூறியிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 21 அன்று டெல்லி கிழமை நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி அணில் அண்டில் சவுத்திரியின் பிணை மனுவை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
source: தி வயர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.