Aran Sei

விசாரணை கைதி சிறையில் மரணம் – சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

டந்த ஆண்டு, திகார் சிறையில் 23 வயது விசாரணைக் கைதி கொல்லப்பட்டது தொடர்பாகச் சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு சிறை நிர்வாகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திகார் சிறையில் நடைபெற்ற தாக்குதலில், உயிரிழந்த  தில்ஷெர் ஆசாத்தின் மரணத்திற்கு 5 கோடி இழப்பீடு கோரி தில்ஷெரின் தந்தை தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இதைத் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நீதிமன்றம், “இது போன்ற செயல்களைப் புனைவுகளில் மட்டுமே காண முடியும்” என தெரிவித்திருந்தது. மேலும், சம்பவத்தின்போது சிறை வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த அதிகாரிகள்மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளது.

‘பொதுமுடக்கத்தால் 8.9 கோடி இந்தியர்கள் கொடிய வறுமைக்கு தள்ளப்படுவர்’ – ஐ.நா. ஆய்வறிக்கை

நான்கு வெவ்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்ட தில்ஷெர்,  கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி திகார் சிறைச்சாலையின் 3 ஆம் எண் அறையில் உள்ள கைதிகளால் தாக்கப்பட்டார். சிறை மருத்துவர் வந்து பார்த்தபொழுது அவர் உயிரிழந்திருந்தார். இது தொடர்பாக 3 கைதிகள்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் பயணத்தில் அலைப்பேசிக்கு சார்ஜ் செய்ய கட்டுப்பாடு – தீவிபத்துகளை தடுக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவு

கைதிகள் வேத் பிரகாஷ், நவ்ஷாத் மற்றும் ஃபைசல் ஆலம் ஆகியோர் ‘கையால் தயாரிக்கப்பட்ட கூர்மையான முனைகொண்ட பொருள்’ வைத்துத் தாக்கியதில் தில்ஷெர் உயிரிழந்ததாக சிறை நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

முன்னதாக, கடந்த மாதம் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவில், சிசிடிவி காட்சிகள் தெளிவற்றதாக இருக்கிறது. இந்தக் காட்சிகள் தான் விசாரணை அதிகாரியிடமும் காண்பிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்