தொலைபேசிகளை கண்காணித்தல் மற்றும் தொலைபேசி அழைப்புகளை இடைமறிப்பதில் பின்பற்றப்படும் சட்ட நடைமுறை குறித்து ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கண்காணிப்புத் திட்டங்களான மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பு (CMS), நெட்வொர்க் போக்குவரத்து பகுப்பாய்வு (NETRA) மற்றும் தேசிய நுண்ணறிவு கட்டம் (NATGRID) ஆகியவற்றிற்கு நிரந்தரத் தடைவிதிக்க வேண்டுமென தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில் நீதிமன்ற இவ்வாறு தெரிவித்துள்ளது .
இந்த மனுவை பொது நல வழக்கு மையம் (CPIL) மற்றும் மென்பொருள் சுதந்திர சட்ட மையம் ஆகிய அமைப்புகள் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேதா, “இவை அனைத்தும் பொது நலன் சார்ந்த பிரச்சினைகள் அல்ல” மேலும் ஒன்றிய அரசு “தொடர்புடைய மற்றும் குறிப்பிடத்தக்க” அளவில் பதிலளிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பு (CMS), நெட்வொர்க் போக்குவரத்து பகுப்பாய்வு (NETRA) மற்றும் தேசிய நுண்ணறிவு கட்டம் ஆகியவற்றின் வழியாக அரசு நிர்வாகிகள் தொலைபேசி மற்றும் இணையத் தகவல் தரவுகளை இடைமறிக்கவும், சேமிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் சேமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்வது அடிப்படை உரிமையான தனியுரிமையை மீறும் செயலாகும் என்றும் மனுதாரர் நீதி மன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும் வகையில் அரசு வழக்கறிஞர் காலஅவகாசம் கேட்ட நிலையில்,செப்டம்பர் 30 அன்று மேற்கொண்டு விசாரிக்கப்படவுள்ளது.
source: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.