Aran Sei

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா இலவச தடுப்பு மருந்து: டெல்லி அரசு திட்டம்

டகவியலாளர்களுக்குக் கொரோனா இலவச தடுப்பு மருந்து முகாம்கள் விரைவில் அவர்களின் அலுவலகங்களிலேயே நடத்தப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

ஊடக நிறுவனங்களிடம் இருந்து ஊடகவியலாளர்களின் பட்டியலை டெல்லி அரசு கோரியுள்ளது.

இதுதொடர்பாக, டெல்லி அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஊடகவியலாளர்களுக்குச் சிறப்பு தடுப்பு மருந்து முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பணியிடங்களிலேயே அம்முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். ஊடக நிறுவனங்களிடம் இருந்து அவர்களின் ஊழியர்கள் பட்டியலை அரசு கோரியுள்ளது. அவர்களிடமிருந்து பட்டியல்களைப் பெற்ற பிறகு தடுப்பு மருந்து முகாம்கள் தொடங்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் 10 நாட்களில் 6 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு –  ஆக்சிஜன் கிடைத்தும் வெண்டிலேட்டர்கள் கிடைக்காததால் நேர்ந்த அவலம்

மேலும், தடுப்பு மருந்துகளின் விலையை டெல்லி அரசே ஏற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஊடகவியலாளர்கள் தங்களை கொரோனா முன்களப் பணியாளர்களாக என்று அறிவிக்க வேண்டும் என்றும், தடுப்பு மருந்து செலுத்தப்படுவதில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

பீகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள், ஏற்கனவே ஊடகவியலாளர்களுக்குக் கொரோனா தடுப்பு மருத்து செலுத்துவதற்கான  முகாம்களை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

Source : New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்