டெல்லி உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மலையாளத்தில் பேசக் கூடாது, ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும்தான் பேச வேண்டும், அவ்வாறு பேசாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த முடிவை விமர்சித்துள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள், அவர்கள் எப்போதும் நோயாகளுடன் இந்தியில் மட்டுமே பேசிவருதாக கூறியுள்ளனர்.
”ஜிப்மரில் பணிபுரியும் செவிலியர்கள், பணியிடங்களில் தகவல் தொடர்பிற்கு மலையாள மொழியைப் பயன்படுத்துவது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது. மலையாள மொழி தெரியாத நோயாளிகள் மற்றும் சக ஊழியரகளுக்கு இது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக உணர்கிறோம். எனவே அனைத்து செவிலியர்களும் இந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே தகவல் தொடர்புக்கு பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என டெல்லியில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
”இந்த மருத்துவமனையில் மலையாளம் பேசும் செவிலியர்கள் 300 முதல் 350 பேர் பணிபுரிகிறோம். நாங்கள் எப்போதும் நோயாளிகளுடன் இந்தியில் தான் பேசுகிறோம். அவர்களிடம் மலையாளத்தில் பேசினால் ஏதாவது புரியும் என்று நினைக்கிறீர்களா?. நாங்கள் எங்களுக்குள் கூட மலையாளத்தில் பேசக் கூடாது என மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது” என ஒரு செவிலியர் கூறினார்.
திங்கள்கிழமை மருத்துவமனையின் செவிலியர்கள் சங்கத்தினர் மூலம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
”நாங்கள் கேரளாவில் இருந்து வந்தவர்களிடம் மட்டுமே மலையாளத்தில் பேசுகிறோம். அது எங்கள் தாய்மொழி. மலையாளத்தில் பேசிக்கொள்ள கூடாது என்று அவர்கள் எப்படி சொல்ல முடியும்?. பஞ்சாபிகள் தங்களுக்குள் பஞ்சாப் மொழியில் பேசிக் கொள்ள கூடாது என்று அவர்கள் சொல்வார்களா?” என டெல்லி அரசு நடத்தும் மிகப்பெரிய மருத்துவமனையான எல்.என்.ஜே.பி மருத்துவமனையின் செவிலியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜீமோல் ஷாஜி கூறினார்.
இது தொடர்பாக டெல்லி அரசின் செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.