Aran Sei

‘ஆம் ஆத்மியினர் மீது போலி வழக்குகள் பதிய உத்தரவிட்ட ஒன்றிய அரசு’– பிரதமர் மோடி மீது துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா குற்றச்சாட்டு

credits : outlook

பிரதமர் மோடி மத்திய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் விசாரணை முகமைகளிடம் 15 நபர்கள் கொண்ட பட்டியலைப் பிரதமர் மோடி அளித்திருப்பதாகவும், பட்டியலில் இருக்கும் நபர்களை மீது சோதனை நடத்தி, போலியான முதல் தகவல் அறிக்கைகளை பதிய உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.

காணொளி கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து ஒன்றிய அரசிடம் இருந்து உடனடியாக எந்த எதிர்வினையும் வரவில்லை.

”சிபிஐ, அமலாக்கத்துறை, டெல்லி காவல்துறையினரிடம் 15 பேர் கொண்ட பட்டியலைப் பிரதமர் மோடி அளித்தார் என்று நம்பகமான ஆதாரங்களில் இருந்து நாங்கள் அறிந்துள்ளோம். பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அடுத்த தேர்தலுக்கு முன்பாக அவர்களை அழிப்பதற்காக சோதனை நடத்தி, போலி முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வேலையை டெல்லி காவல்துறை ஆணைய ராகேஷ் ஆஸ்தானா செய்து தருவதாக உறுதியளித்துள்ளார் என அவர் கூறியுள்ளார்.

”ராகேஷ் அஸ்தானா மோடியின் ‘பிரம்மாஸ்திரம்’. அவர் வந்தால், அவரது வேலையைச் செய்டு முடிப்பார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி உண்மை மற்றும் நேர்மை அரசியலை செய்கிறது எனக் கூறிய மணிஷ் சிசோடியா, “நீங்கள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என யாரையும் அனுப்பலாம், நாங்கள் அவர்களை வரவேற்போம்” என கூறியுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்