Aran Sei

‘கொரோனா மருந்துகளுக்கான வரிவிலக்கை பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டும் எதிர்க்கின்றன’ – டெல்லி அரசு குற்றச்சாட்டு

கொரோனா மருந்துகள் மற்றும் சிகிச்சை உபகரணங்கள் மீதான வரிகளை நீக்க வேண்டும் என்ற மாநில அரசுகளின் கோரிக்கையை, பாஜகவைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர் என்று டெல்லி துணை முதல்வரும் நிதியமைச்சருமான மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

நேற்று (மே 28), இந்திய ஒன்றியத்தின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநில நிதியமைச்சர்கள் கலந்துக்கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இணையவழியில் நடைபெற்றுள்ளது.

‘ஜிஎஸ்டி அமலுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன’ – ஜிஎஸ்டி கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன்

இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனீஷ் சிசோடியா, “கொரோனா தடுப்பு மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், பிபிஇ கருவிகள், சானிடைசர்கள், முககவசங்கள், கொரோனா தொற்று பரிசோதனைக் கருவிகள் போன்றவற்றுக்கு வரிவிலக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைத்தோம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  “பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களும் இதே கோரிக்கையையே முன்வைத்தன. ஆனால், பாஜகவைச் சேர்ந்த மாநில நிதியமைச்சர்கள் இந்த கோரிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.” என்று டெல்லி துணை முதல்வரும் நிதியமைச்சருமான மனீஷ் சிசோடியா கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்