Aran Sei

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சிறுமியின் உடல் வலுக்கட்டயாமாக தகனம் – போராட்டத்திற்கு பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்த காவல்துறை

Image Credits: The Quint

டெல்லி நங்கல் பகுதியில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட தலித் சிறுமியின் உடலை வலுக்கட்டாயமாக தகனம் செய்தது தொடர்பாக 4 பேர்மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சிறுமியின் மரணத்திற்கு சுடுகாட்டின் 55 வயது பூசாரியான ராதே ஷ்யாம், மற்றும் ஊழியர்கள் சலீம், லக்‌ஷ்மி நாராயன் மற்றும் குல்தீப் தான் என சிறுமியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டிய நிலையில், கிராமத்தினர் போராட்டம் செய்ததை அடுத்து அவர்களை டெல்லி கன்டோன்மெண்ட்  காவல்துறையினர் கைது செய்தனர்.

ஞாயிற்கிழமை சுடுகாட்டிற்கு தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி திரும்பி வராதததை அடுத்து சந்தேகப்பட்ட அவரது தாயார் சென்று பார்த்த சிறுமி, உயிரிழந்திருந்தார். தண்ணீரை குளிர்விக்கும் சாதனத்தில் இருந்து மின்சாரம் தாக்கிச் சிறுமி உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சிறுமியின் உடலைக் கண்ட அவரது தாயார் சிறுமியின் மணிக்கட்டில் மற்றும் முழங்கையில் தீக்காயங்கள் மற்றும் உதடுகள் நீல நிறத்தில் இருந்ததையும் அவர் கவனித்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் மரணம் தொடர்பாக காவல்துறைக்கு சென்றால், அவர்கள் பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்புகளை திருடிக் கொள்வார்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினரை கட்டாயப்படுத்தி, சிறுமியின் உடலை வலுக்கட்டாயமாக அடக்கம் செய்துள்ளனர்.

பின்னர், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய பெற்றோருடன், 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் 4 பேரையும் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 302, 376 மற்றும் 506, போக்சோ சட்டம் மற்றும் வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற டெல்லி அரசின் சமூக நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராஜேந்திர பால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, “காவல்துறை நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் டெல்லி அரசு நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடும்” என தெரிவித்தார்.

ஒரு தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொல்லப்பட்டுள்ளது தொடர்பாக பேசியுள்ள டெல்லி காங்கிரஸ் தலைவர், டெல்லியை ‘மற்றொரு ஹத்ராஸாக’ மாற்ற அனுமதிக்க கூடாது என கூறியுள்ளார்.

Source : The Wire 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்