Aran Sei

பெண்ணின் விருப்பமின்றி பாலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையே – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டந்த காலத்தில் பாலுறவு கொண்டிருந்தாலும் பெண்ணின் விருப்பமின்றி மீண்டும் பாலுறவு கொள்ள முயன்றாலும் அது பாலியல் வன்கொடுமையேயென டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

பாலியல்வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹிரேமத் என்பவர் தாக்கல் செய்தி முன்ஜாமீன் மீதான மனு மீதான விசாரணையின்போது டெல்லி நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.

கணவன் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் சரி பாலியல் வன்புணர்வு செய்தார் என கூறலாமா ? : உச்ச நீதிமன்றம்

இந்நிலையில் மனுவின்மீதான் விசாரணையின்போது பாட்டியாலா கூடுதல் அமர்வு வழங்கிய அந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டி குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமின் மனுவில் ” என்னைப் பார்க்க அந்தப் பெண் புனேவில் இருந்து டெல்லி வந்ததார். நாங்கள் இருவரும் இருக்க ஒரு அறையையே எடுத்தோம் ,விருப்பப்பட்டே அறைக்கு வந்தார் ” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் – குற்றவாளியையே திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் நீதிமுறை

ஆனால் இந்த மனுவின் மீதான விசாரணையின்போது , ஒரு பெண் விருப்பப்படாமல் பாலுறவு கொள்ள முயற்சித்தால் அது பாலியல் வன்கொடுமையே என்றும் ,பெண்ணோடு கடந்த காலத்தில் உறவு கொண்டிருந்தாலும் அது ஒரு பொருட்டே இல்லை என்றும் நீதிமன்ற அமர்வு
தெரிவித்துள்ளது.

SOURCE; THE INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்