Aran Sei

கைது செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு 4 நாள் போலீஸ் காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

ரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு 4 நாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் இன்று (ஜூன் 28) உத்தரவிட்டுள்ளது.

உண்மைச் சரிபார்ப்பு வலைத்தளமான ஆல்ட் நியூஸின் இணை நிறுவனரான திரு ஜுபைர் நேற்று கைது செய்யப்பட்டு ஒரு நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் மேலும் முகமது ஜூபைருக்கு மேலும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறையினர் இன்று அவகாசம் கோரினர். இதனையடுத்து 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் இஸ்லாமியர் என்பதால் தான் கைது செய்யப்பட்டுள்ளார்: வழக்கறிஞர் பிருந்தா குரோவர் கருத்து

1983-ம் ஆண்டு சென்சார் போர்டு ஒப்புதல் அளித்த திரைப்படத்தின் ஸ்கிரீன்ஷாட்டிற்காக 2018-ம் ஆண்டு ட்வீட் செய்ததற்காக பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார். இதே ட்வீட் டை பலர் செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கும் முகமது ஜுபைருக்கும் உள்ள வித்தியாசம் அவரது பெயர்தான் என்று அவரின் வழக்கறிஞர் பிருந்தா குரோவர் இன்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முகமது ஜுபைரின் ட்விட்டர் பதிவு இந்து உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கலவரத்தைத் தூண்டுவதாகவும் ட்விட்டர் பயனரின் புகாரின் பேரில் 2018 இல் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது. அவர் மீது பிரிவுகள் 153 (கலவரத்தைத் தூண்டுதல்) மற்றும் 295 (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டது) கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது

டெல்லி: முகமது சுபைரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

உண்மையில், ஜுபைரின் ட்விட்டர் பதிவின் புகைப்படம், ஹிருஷிகேஷ் முகர்ஜி இயக்கிய 1983 ஆம் ஆண்டு வெளியான ’‘கிஸ்ஸி சே நா கெஹ்னா (ssi Se Na Kehna)’ என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் காட்சியிலிருந்து எடுக்கப்பட்டது. தணிக்கை வாரியத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்டு பின்னர் இந்தியா முழுவதும் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

இதில் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவோ அல்லது பகைமையை ஊக்குவித்ததாகவோ குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. இது வழிபாட்டுத் தலம் அல்ல. இது தேனிலவு பற்றிய நகைச்சுவை. இந்த முழு வழக்கும் அபத்தமானது என்று வழக்கறிஞர் பிருந்தா குரோவர் தெரிவித்துள்ளார்.

“2018 இல் செய்யப்பட்ட இந்த ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க 2018-2022 க்கு இடையில் என்ன நடந்தது? முகமது ஜுபைர் அவரது பணிக்காக குறிவைக்கப்படுகிறார் என்று வழக்கறிஞர் பிருந்தா குரோவர் தெரிவித்துள்ளார்.

Source : NDTV

ஓபிஎசை சமாளிக்க முடியாமல் திணறும் எடப்பாடி SP Lakshamanan Latest Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்