Aran Sei

அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை அளிக்க மறுத்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்: பள்ளி நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

யோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடையாக ரூ.70,000 தர மறுத்த தலைமை ஆசிரியையை பணி இடைநீக்கம் செய்த பள்ளி நிர்வாகத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பள்ளி நிர்வாகிகள், அப்பள்ளியை நடத்தும் ஆர்எஸ்எஸ்ஸின் அறக்கட்டளையான சமர்த் சிக்ஷா சமிதி மற்றும் டெல்லி மாநில அரசின் கல்வி இயக்குநரகம் ஆகியவற்றுக்கு நீதிபதி காமேஷ்வர் ராவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்காக சமர்த் சிக்ஷா சமிதியால் நடத்தப்படும் அனைத்து பள்ளிகளுக்கும் ரூ.70,000 முதல் ரூ.1,00,000 வரை வசூலித்து அளிக்க அல்லது பங்களிப்பு செய்ய இலக்கு வழங்கப்பட்டது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சம்பிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்கதையாகும் அயோத்தி ராமர் கோயில் நில ஊழல் – பாஜக எம்.எல்.ஏ, கோயில் அறக்கட்டளை மீது மற்றுமொரு புகார்

மேலும், இந்த இலக்கை எட்ட, மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர்களிடம் வசூலிக்க வேண்டும். அல்லது, மார்கெட் போன்ற பொது இடங்களுக்கு சென்று கடைக்காரர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து நன்கொடை வசூலிக்குமாறும் பள்ளி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களிடம் சம்பர் நிதி என்ற பெயரில் 15,000 ரூபாயை பள்ளி நிர்வாகம் வசூலித்துள்ளது.

மேலும் அம்மனுவில், “2016 ஆம் ஆண்டில் தலைமை ஆசிரியையின் கணவர் விபத்தில் சிக்கியதால், கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறார். மோசமான நிதி நெருக்கடியில் இருந்தபோதிலும், அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.2,100 நன்கொடையை தலைமை ஆசிரியை அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரூ.15,000 கொடுக்க மறுத்ததால், அன்று முதல், சமர்த் சிக்ஷா சமிதி அறக்கட்டளை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்தது. தலைமை ஆசிரியருக்கு தொல்லைக் கொடுக்கும் வேலைகளையே செய்து வந்துள்ளது. இதன் வழியாக, அவரை ராஜினாமா செய்ய வைப்பது அல்லது பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சமர்த் சிக்ஷா சமிதி இருந்துள்ளது” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வந்தால் 5000 ரூபாய் நிதி – பழங்குடிகளை காவிமயமாக்குகிறதா குஜராத் பாஜக அரசு?

இதுதொடர்பாக, தலைமை ஆசிரியை டெல்லி மாநில கல்வி இயக்குனரகத்தில் புகார் அளித்துள்ளார். அத்தோடு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இதைத்தொடர்ந்து, விளக்கம் கேட்டு பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், பள்ளி நிர்வாகம் அவரை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தியுள்ளது.

இந்த இடைநீக்க உத்தரவை ஏற்க மறுத்துள்ள தலைமை ஆசிரியை, கருணை அடிப்படையில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்கு தன்னை பணிமாற்றுதல் செய்யுமாறு கோரியுள்ளார்.

Source:  New Indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்