டெல்லி கலவரத்துடன் தொடர்புடைய கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு பிணை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
”விசாரணை முடிய நிறைய நேரம் எடுக்கும், அதுவரை அவர்களை சிறையில் அடைக்க முடியாது மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என நீதிமன்றம் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
பிணை வழங்கிய டெல்லி நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத், ”நீதிமன்றத்தின் முன்அனுமதியின்றி டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம். எந்த ஆதாரத்தையும் சிதைக்கவோ அல்லது சாட்சியங்களை தொடர்பு கொள்ளவோ வேண்டாம்” என குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மாநிலங்களுக்குப் பயனளிக்காத ஜிஎஸ்டி; பரிசீலனை செய்ய இதுவே நேரம் – தாமஸ் ஐசக்
”அவர்கள் ஒவ்வொரு விசாரணை தேதி அல்லது நீதிமன்ற வழிகாட்டுதல்படி நீதிமன்றத்தில் ஆஜராவார்கள். மேலும் அவர்கள் விடுவிக்கப்பட்ட உடனேயே அவர்கள் இனி பயன்படுத்தும் செல்போன் எண்குறித்து உள்ளூர் காவல்நிலைய அதிகாரியிடம் தெரிவிப்பார்கள்” என நீதிமன்றம் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பிரம்மபுரி ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் அருகே வினோத்குமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மொத்தம் 12 பேர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் சக குற்றவாளிகள் 5 பேருக்கு ஏற்கனவே நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
மாநிலங்களுக்குப் பயனளிக்காத ஜிஎஸ்டி; பரிசீலனை செய்ய இதுவே நேரம் – தாமஸ் ஐசக்
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாகிர் அகமது, நவீத் கான், ஜாவேத் கான், அர்ஷத் என்கிற சோனு, குல்சார், மொஹத். இம்ரான் மற்றும் சந்த் பாபு ஆகிய 7 பேருக்கும் நீதிமன்றம் நேற்று (ஜூன் 30) பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
“உண்மைகள், சூழ்நிலைகள், காவலில் உள்ள காலம், சமநிலை பிரச்சினை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் பிணை விண்ணப்பங்களும் அனுமதிக்கப்படுகின்றன” என நீதிமன்றம் அதன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.