Aran Sei

டெல்லி குடியரசு தின வன்முறை – 10ஆம் வகுப்பு மாணவன் உட்பட 5 பேருக்கு ஜாமீன்

credits : the wire

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த பேரணியில் கலவரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உட்பட ஐந்து பேருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரி 26 ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் காவல்துறையினருக்கும் விவசாயிகளின் ஒரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டனர்.

டிராக்டர் பேரணியின் போது, காவல்துறை அதிகாரிகளை தாக்கியதாகவும் காவல்துறையினரின் ஆயுதங்களை கைபற்றியதாகவும் ரவி, ஆஷிஷ், பர்வேஷ், தீபக் சிங், பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

’டெல்லி குடியரசு தின டிராக்டர் பேரணி தடைகளை தாண்டி நடக்கும்’ : விவசாய சங்கங்கள் திட்டவட்டம்

இந்த வழக்கு கூடுதல் சிறப்பு நீதிபதி, சுதான்ஷு கெளஷிக் முன், விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் போலியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் டெல்லியில் அமைதியாக நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ளவே அவர்கள் வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறை – நடிகர் தீப் சித்துவை கைது செய்த டெல்லி காவல்துறை

காவல்துறையால் மனுதாரர்கள் செய்ததாக கூறப்பட்ட எதுவும், சிசிடிவி காட்சிகளில் பதிவாகவில்லை என கூறிய வழக்கறிஞர், கைது செய்யப்பட்ட 18 மணி நேரத்திற்கு பிறகு தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

டெல்லியின் மட்டுமில்லை – 20 மாநிலங்களில் விவசாயிகளின் குடியரசு தின பேரணிகள்

குற்றம்சுமத்தப்பட்ட, பத்தாம் வகுப்பு பயிலும் சிறுவனின் வாழ்க்கை பாழாகி விடும் என்றும் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு கடினமான காலத்தை தர வேண்டாம் எனவும் வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘கைது செய்யப்பட்ட விவசாயிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்க’ – குடியரசுத் தலைவருக்கு விவசாயிகள் கடிதம்

இதை எதிர்த்து வாதாடிய, அரசு தரப்பு வழக்கறிஞரான பல்பிர் சிங், அவர்கள் விவசாயிகள் இல்லை எனவும், கலவரம் செய்வதற்காகவே கொண்டு வரப்பட்ட ஆட்கள் எனவும், விவசாயிகள் போராட்டம் தொடர்வதால் இவர்களை ஜாமீனில் விடுவித்தால், வெளியேச் சென்று மிண்டும் கலவரம் செய்யக் கூடும் எனவும் எச்சரித்து ஜாமீன் மனுவை நிராகரிக்க கோரியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்னாலாவில் கூடிய லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் – டெல்லி போலீசுக்கு எச்சரிக்கை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ”குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கபடாமல் இருக்கும்போது, அவர்கள் மீண்டும் குற்றம் செய்யக்கூடும் எனும் யூகத்தில், அவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி  வெளியிட்டுள்ளது.

குடியரசு தின டிராக்டர் பேரணி மோதல் – நடிகர் தீப் சித்து குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம்

மேலும், குற்ற சுமத்தப்ப்பட்டிருப்பவர்கள் யார் மீதும், எந்த குற்ற பின்னணியும் இல்லாததால், ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்